விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிப்பு! சிக்னலை அடையும் பணித் தீவிரம்!

08 September 2019 அரசியல்
vikramlander12.jpg

சற்றுமுன் கிடைத்தத் தகவலின் படி, விக்ரம் லேண்டர் விண்கலத்தின் இருப்பிடத்தை நம் இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில், சந்திராயன் 2 விண்கலத்தின் மூலம் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவின் தரைமட்டத்திலிருந்து சுமார் 2.1 கிலோ மீட்டர் தூரத்தில், தன்னுடைய சிக்னலை இழந்தது. இதனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர், இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் ஈடுப்பட்டனர். விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்காததால், சந்திராயன்2 திட்டம், கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்ததாக நினைத்தனர்.

நேற்று மாலை டிடி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த, இஸ்ரோவின் தலைவர் திரு.சிவன் அவர்கள், இன்னும் 14 நாட்களுக்குள் விக்ரம் லேண்டரில் இருந்து, சிக்னலைப் பெரும் வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கான முயற்சிகள் தொடரும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவும் பகலுமாக, தொடர்ந்து விக்ரம் லேண்டரைத் தேடி வந்தனர். இந்லையில், இன்று மதியம் 1.30 மணியளவில் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை, கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

HOT NEWS