நிலவினை நெருங்கும் விக்ரம் லேண்டர்- சந்திராயன்2வில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது!

28 August 2019 அரசியல்
vikramlander.jpg

உலகில் வேறு எந்த நாடும், நிலவின் தென்துருவப் பகுதியில் ஆய்வுகள் செய்ததில்லை. இதனை முறியடிப்பதற்காகவே, இந்தியாவின் சார்பில், சந்திராயன்2 விண்கலம் நிலவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்தில், நிலவினை ஆராய்ச்சி செய்ய உள்ளர் விக்ரம் லேண்டர் விண்கலம் உள்ளது. அதனை, அந்த சந்திராயன்2 விண்கலத்தில் இருந்து பிரித்து, நிலவிற்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

நேற்று மதியம் 12.45 மணி அளவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது, விக்ரம் லேண்டர் விண்கலம், சந்திராயன்2வில் இருந்து வெற்றிகரமாகப் பிரிகப்பட்டது. இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள், மகிழ்ச்சியுடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.

பின்னர், விக்ரம் லேண்டர் விண்கலம் அதற்கு குறிக்கப்பட்ட, பாதையில் இருந்து கொண்டும், நிலவினைச் சுற்றிக் கொண்டும், நிலவினை நெருங்கி வருகிறது. செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில், விக்ரம் லேண்டர் விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியில் இறங்கி, ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

HOT NEWS