விக்ரம் லேண்டர் முயற்சியை 20ம் தேதி வரை நீட்டித்துள்ளது! பொதுமக்களுக்கும் நன்றி கூறியுள்ளது!

17 September 2019 தொழில்நுட்பம்
vikramlanderfound.jpg

விக்ரம் லேண்டர் இன்னும் செயல்படாமலேயே நிலவில் கிடக்கிறது. இதனை இந்திய விஞ்ஞானிகள் தீவிரமாக, ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது இஸ்ரோ.

இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து, விக்ரம் லேண்டரை, நிலவில் தரையிறக்கும் பொழுது, சுமார் 2.1 கிலோமீட்டர் உயரத்தில், அதனுடன் இருந்து வந்தத் தொலைத் தொடர்பு துண்டானது. இதனால், அதனை நிலவில் இறக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.

இருப்பினும், நிலவினை சுற்றி வரும், ஆர்பிட்டர் உதவியுடன், விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சரியாக இறங்கும் இடத்தில் இருந்து, 500 மீட்டர் தொலைவில், தரையில் மோதி விழுந்துள்ளது விக்ரம் லேண்டர். இருப்பினும், விக்ரம் லேண்டர் துண்டு துண்டாக உடையவில்லை என இஸ்ரோ அறிவித்தது. இன்னும், 14 நாட்கள் நாம் அதனுடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில், ஈடுபடுவோம் என அறிவிப்பினையும் வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து, விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தின் புகைப்படத்தினை எடுக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள், நாசாவின் விஞ்ஞானிகளிடம் உதவி கோரினர். இந்நிலையில், இன்று மாலை அல்லது நாளைக் காலையில், நாசாவின் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது, துணையாக இருந்த, அனைத்து மக்களுக்கும் நன்றி. நாம் தொடர்ந்து, முன்னேறி செல்வோம். இந்தியர்களின் நம்பிக்கையையும், கனவையும் தாங்கி, உலகைத் தாண்டிச் செல்வோம் என டிவீட் செய்துள்ளது. மேலும், செப்டம்பர் 20ம் தேதி வரை, விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட, உள்ளதாக கூறியுள்ளது.

HOT NEWS