கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்ட கோலி! குழந்தைகளுக்கு அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி!

23 December 2019 அரசியல்
kohlisantaclaus.jpg

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ தான், தற்பொழுது இணைய உலகிலும் சரி, கிரிக்கெட் உலகிலும் சரி, வைரலாக உள்ளது. அது வேறெதுவுமில்லை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் வீடியோ தான்.

கொல்கத்தாவில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதில், உங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ யார் என கேள்வி கேட்கப்பட்டது. அதில், பலரும் சூப்பர் மேன் மற்றும் ஸ்பைடர் மேன் எனக் கூறினர். ஒரு சிலர், ஐயர் மேன், பிளாக் பேண்டர் எனவும் கூறினர். இதனை, அமைதியாக வீடியோ மூலம் விராட் கோலிக்குக் காட்டப்பட்டது.

பின்னர், இந்த கிறிஸ்துமஸிற்கு உங்களுக்கு என்ன கிப்ட் வேண்டும் எனவும் கேட்கப்பட்டது. அதற்கு, எனக்கு பொம்மை வேண்டும், சாக்லெட் வேண்டும் என, குழந்தைகள் தங்களுடைய விருப்பங்களைக் கூறினர். பின்னர், இந்த குழந்தைகள் காப்பகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது, ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்தார். அவர் அங்கிருந்த குழந்தைகள் ஆசைப்பட்ட பொருட்களைத் தந்தார். பின்னர், தன்னுடைய வேடத்தினைக் கலைத்தார். அவர் வேறு யாருமல்ல, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான். கோலியினைப் பார்த்த உடன், அந்தக் குழந்தைகள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

வேகமாக ஓடி வந்த குழந்தைகள், விராட் கோலியினைக் கட்டிப் பிடித்துக் கொண்டனர். விராட் கோலியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு தன்னுடைய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை விராட் கோலி தெரிவித்தார்.

HOT NEWS