பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான கோலி! விஷயம் என்ன?

02 March 2020 விளையாட்டு
viratkohliangry.jpg

பத்திரிக்கையாளரின் கேள்விகளால், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி கடுப்பான சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்து, இந்திய அணி 2-0 என தொடரினைப் பறிகொடுத்தது. இதனால், இந்திய வீரர்கள் கவலைத் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டனர்.

இந்நிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனின் விக்கெட்டினை பூம்ரா வீழ்த்தினார். அப்பொழுது, விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக கத்தியதோடு மட்டுமில்லாமல், முஷ்டியினை உயர்த்தியும் காட்டினார்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பத்திரிக்கையாளர்கள் சராமாரியாக கேள்வி கேட்டனர். அப்பொழுது ஒரு பத்திரிக்கையாளர், நீங்கள் வில்லியம்சன் அவுட்டான பொழுது, ஆவேசமாக செயல்பட்டீர்கள். அதற்கு என்ன அர்த்தம். நீங்கள் இந்திய அணியின் கேப்டன். நீங்கள் அந்த அணிக்கு வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் இருக்க வேண்டாமா எனக் கேட்டார். அதற்கு கோபமடைந்த கோலி, நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என பதில் கேள்வி கேட்டார்.

அதற்கு பத்திரிக்கையாளர், நான் உங்களிடம் கேள்வி கேட்டேன் என்றார். அதற்கு கோலி, நான் உங்களிடம் பதில் கேட்கின்றேன் என்றார். நீங்கள் சிறந்த எடுத்துக்காட்டாக நடந்து கொண்டிருக்க வேண்டும் என்றார். அதற்கு விளக்கமளித்த விராட் கோலி, நான் விளையாட்டு மைதானத்தில் நடந்த கொண்டதை முழுமையாகப் பார்க்க வேண்டும். ஏன் அப்படி செய்தேன் என உணர வேண்டும். அரைகுறை கேள்விகளுடன் வந்து எங்களிடம், கேள்விக் கேட்கக் கூடாது.

நீங்கள் சர்ச்சையை ஏற்படுத்த நினைத்தால், அதற்கான இடம் இதுவல்ல என்றுக் கூறினார். நான் விளையாடும் பொழுது, ஆட்ட நடுவரிடம் இது குறித்துப் பேசினேன். அதற்கு, அவரும் இதனால், ஒரு பிரச்சனையும் இல்லை என்றுக் கூறினார் என கோலி தெரிவித்தார்.

HOT NEWS