இனி பிரேசிலுக்கு செல்ல விசா தேவையில்லை! இந்தியர்கள் பயணம் செய்யலாம்!

25 October 2019 அரசியல்
brazilflag.jpg

இனி பிரேசிலுக்கு இந்தியர்கள் பயணம் செய்ய விசா தேவையில்லை என, அந்நாட்டு அதிபர் ஜேர் பொல்சோனாரோ தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், இனி பிரேசிலுக்குப் பயணம் செய்ய நினைக்கும் சீனா மற்றும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. நேரடியாக வரலாம் எனக் கூறியுள்ளார். இதன் மூலம், பிரேசலில் அவர்கள் புதிய தொடங்க ஏதுவாக அமையும் எனவும் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதவியேற்ற ஜேர், தொடர்ந்து பிரேசில் நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் உலக வர்த்தகம் ஆகியவற்றில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றார். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் சீனாவிற்கு சென்று வந்தார்.

அதன் பின்னர், அமெரிக்கா, ஜப்பான், கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாட்டினருக்கு விசா தேவையில்லை என அறிவித்தார். இதனால், தொழில் ஆரம்பிக்க நினைக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், தங்கள் நாடுகளுக்கு இனி சுதந்திரமாக வர வழியாக அமையும் என கூறினார். இதனையடுத்து, தற்பொழுது இந்தியா மற்றும் சீன மக்களுக்கு விசா தேவையில்லை எனவும் அறிவித்துள்ளார்.

HOT NEWS