லண்டனில் ரஜினி மருமகன்! பாஸ்போர்ட் தொலைந்ததால் பரபரப்பு!

05 September 2019 சினிமா
rajinifamilymarriage.jpg

லண்டன் சென்றுள்ளனர் நடிகர் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த்தும், அவருடைய கணவர் விசாகனும் விமான நிலையத்தில் மாட்டிக் கொண்டனர்.

லண்டனில் உள்ள ஹீப்ரு விமான நிலையத்தில், விசாகன் தன்னுடைய பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டார். இதனை முன்னிட்டு, இருவரையும், ஓய்வறையில் தங்க வைத்தக் காவல்துறையினர், இந்தியத் தூதரகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால், சௌந்தர்யா மற்றும் விசாகன் ஆகியோர் அங்கிருந்த காவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை முன்னிட்டு, வழக்குப் பதிவு செய்து, அவர்களுடைய பாஸ்போர்ட்டை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதற்கிடையில், இவர்களைப் பற்றி அறிந்த இந்தியத் தூதரகத்தினர், இவர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் என்பதனை, இங்கிலாந்து விமான நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து, தற்காலிக பாஸ்போர்ட் வழங்கி, அவர்கள் பயணிக்கவும் அனுமதி அளித்துள்ளனர்.

HOT NEWS