48 மணி நேரப் போராட்டம்! கட்டுப்பாட்டுக்குள் வந்த விஷவாயு!

10 May 2020 அரசியல்
visakhapatnamgasleak.jpg

விஷசாகப்பட்டினத்தில் உள்ள ஆலையில் இருந்து கசிந்த விஷவாயுவினை, 48 மணி நேரப்போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

கடந்த வாரம், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எல்ஜி பாலிமர் தொழிற்சாலையில் இருந்து, ஸ்டிரைன் விஷவாயு கசிந்தது. இதனால், அப்பகுதியில் வசித்து வந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர்க்கு மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் முதலியப் பிரச்சனைகள் ஏற்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அந்த தொழிற்சாலையைச் சுற்றிலும் உள்ள ஐந்து கிராமங்களைச் சேர்ந்த, சுமார் 15,000க்கும் அதிகமானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு தற்காலிகமாக அனுப்பப்பட்டனர். இதனிடையே, அந்த விஷவாயுவினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், தீயணைப்புத் துறை வீரர்கள், என்டிஆர்எப் மற்றும் என்ஈஈஆர்ஐ பிரிவினர் இறங்கினர்.

மேலும், குஜராத்தில் இருந்து பிடிபீசி என்ற அமைப்பின் வீரர்களும் இந்த விஷவாயுவினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் களமிறங்கினர். தற்பொழுது வரை, சுமார் 60% அதிகமான விஷ வாயுவினை சமநிலைப்படுத்தி உள்ளதாகவும், விரைவில் அனைத்து விஷவாயுக்களும் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே, இந்த பிரச்சனைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ள, அந்த தொழிற்சாலைக்கு 50 கோடி ரூபாய் அபராதத்தினை, அம்மாநில அரசு விதித்துள்ளது.

HOT NEWS