ராட்சசன், முண்டாசுப்பட்டி உட்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். அவர் தற்பொழுது புதிய தோற்றத்துடன், மிக பிட்டாக காட்சியளிக்கின்றார்.
அவர் இடையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, அவருடைய உடல் எடைக் கூடியது. இதனையடுத்து, அவர் தற்பொழுது அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். மேலும், தன்னுடையத் தற்பொழுதைய உடலையும் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
அவர் தன்னுடைய அறிக்கையில், எனக்கு இடையில் ஒரு விபத்து ஏற்பட்டதாகவும், அதனையடுத்து உடல் எடைத் தாறுமாறாகக் கூடி விட்டதாகவும், என்னுடைய உடல் வலிமை இழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர், உடலினை மிக பிட்டாக மாற்ற முயற்சி செய்து உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், முதல் நாளன்று, ஒரு புஸ் அப் கூட எடுக்க இயலவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக உடற்பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டு, தற்பொழுது மிக வலிமையாக மாறியுள்ளதாகவும், உடல் வலிமையாக இருந்தால், மனமும் வலிமையடையும் எனவும் கூறியுள்ளார். எனக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனக் கூறியுள்ளார். அவருடையப் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.