சட்டம் அனுமதிக்கும் பாதையில் நியாயமாகப் போராடுவோம் என, நடிகர் விஷ்ணு விஷால் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
நடிகர் சூரி தன்னை நிலம் வாங்கித் தருவதாக, விஷ்ணு விஷாலின் தந்தை ஏமாற்றி விட்டதாகவும், மேலும் வீர தீர சூரன் படத்திற்கானப் பணத்தினையும் அவர் வழங்கவில்லை என போலீசில் புகார் தெரிவித்தார். இந்த சூழ்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக, நடிகர் விஷ்ணு விஷால் புதிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதில், என் மீதும், என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்களை பற்றி படித்ததும் மிகுந்த அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது.
சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிந்தது. உண்மையில் திரு சூரி, விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸூக்கு 2017ம் ஆண்டு கவரிமான் பரம்பரை என்றப் படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் பணத்தினைத் திருப்பித் தர வேண்டும். அந்தப் படம் சிலத் தவிர்க்க முடியாத காரணங்களால் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம். உண்மை வரும் வரை, ரசிகர்களும் நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொள்கின்றோம். மேலும் உண்மையானத் தகவல்களுடன் செய்தி வெளியிட வேண்டும் எனவும் ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். எல்லாம் தெளிவானப் பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கை எடுப்பேன் என, நடிகர் விஷ்ணு விஷால் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.