சன்டிவி தற்பொழுது ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, அஜித் நடிப்பில், பொங்கல் அன்று வெளியான, விஸ்வாசம் திரைப்படம், டிவி டிஆர்பி விஷயத்தில் முதலிடத்தில் உள்ளதாக அறிவித்துள்ளது.
சன் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, டிவி ஒழுங்கு முறை ஆணையமான பார்க் வெளியிட்டுள்ள தகவலின் படி, விஸ்வாசம் திரைப்படம் சன் டிவியில் ஒளிப்பரப்பட்ட பொழுது, ஒரு கோடியே 81 லட்சத்து 43 ஆயிரம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கு முன், விவேகம் திரைப்படம் நல்ல பார்வையாளர்களைப் பெற்றது. மேலும், அஜித் நடித்த வீரம் திரைப்படமும் நல்ல பார்வையாளர்களைப் பெற்று இருந்தது. இந்நிலையில், விஸ்வாசம் திரைப்படம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
வெள்ளித்திரையில் மட்டுமல்ல, சின்னத்திரையிலும் அஜித் குமார் கிங்காகவே இருக்கிறார்.