தல அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்றது. மேலும், பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனையும் புரிந்தது.
இந்நிலையில், தற்பொழுது மாபெரும் சாதனை ஒன்றினையும் புரிந்துள்ளது. டிவிட்டரில், அதிக அளவில் பேசப்பட்ட ஹேஸ்டேக்காக இந்த #விஸ்வாசம் திரைப்படம் முதல் இடத்தில் உள்ளது. இதனை டிவிட்டர் மொமன்ட்ஸ் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனை, தற்பொழுது படத்தினைத் தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். லோக்சபாஎலக்ஸன்ஸ்2019 மற்றும் உலகக் கோப்பை 2019 போட்டிகளையும் தாண்டி, இந்த விஸ்வாசம் திரைப்படம் டிவிட்டர் மொமன்ட்ஸ்ல் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. இதனை அஜித் குமாரின் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.