களப்பணியாளர்களுக்கு சத்து மாத்திரை! தமிழக அரசு அறிவிப்பு!

27 April 2020 அரசியல்
epscoronaa.jpg

தமிழகத்தில், கொரோனா வைரஸிற்கு எதிராக வேலை செய்யும் களப்பணியாளர்களுக்கு சத்து மாத்திரை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் தடுப்பு பணியில், தன்னலம் கருதாது களப்பணியாற்றுகின்ற, பொது சுகாதாரத் துறை, வருவாய் துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை மற்றும் அனைத்து துறை பணியாளர்களுக்கும், நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கத் தேவையான முகக் கவசங்களும், உரிய பாதுகாப்பு உடைகளும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வரும், மேற்கண்ட அனைத்து துறை பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியினை வலுப்படுத்தும் நோக்கத்தோடு, ஜிங்க் மாத்திரைகளும், மல்டி விட்டமின் மாத்திரைகளும் (27.04.2020) முதல் 10 நாட்களுக்குள் வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.

HOT NEWS