பிரதமர் நரேந்திர மோடித் திரைப்படத்தைத் தொடர்ந்து, பால்கோட் என்ற திரைப்படத்தினையும், நடிகர் விவேக் ஓபராய் தயாரிக்க உள்ளார். கடந்த பிப்ரவரி 14ம் தேதி அன்று நடந்த பால்கோட் தாக்குதலை மையமாகக் கொண்டு, இப்படம் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இருப்பினும், இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் பற்றியத் தகவலை அவர் குறிப்பிடவில்லை. இந்தப் படத்தில் அபிநந்தன் வர்த்தாமன் கதாப்பாத்திரமும் உள்ளது எனவும், இப்படம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில், வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்தப் படமானது ஜம்மூ காஷ்மீர், ஆக்ரா மற்றும் டெல்லி ஆகியப் பகுதிகளில் படமாக்கப்படும் எனவும், இந்தப் படத்தினை வரும் 2020ம் ஆண்டு வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம் நம்ம ஓபராய். சார் ஒரு டவுட், பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஷ் ரிப்போர்ட் சொல்லுங்க ப்ளீஸ்!