இந்தியன் 2 திரைப்படம், தற்பொழுது முழு வீச்சில் தயாராகி வருகிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசன் இப்படத்தில் நாயகனாகவும், காஜல் அகர்வால் இப்படத்தின் நாயகியாகவும் நடிக்கின்றனர்.
மற்றக் கதாப்பாத்திரங்களில் நடிக்கும், நடிகர் மற்றும் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கியக் கதாப்பாத்திரத்தில், நடிகர் விவேக் ஒப்பந்தமாகி உள்ளார்.
இவர் கமல்ஹாசனுடன் இணையும் முதல் படம் இது, என்பது குறிப்பிடத்தக்கது. திரைத் துறைக்கு கே.பாலசந்தர் மூலம் வந்தவர் நடிகர் விவேக். கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகியும் கமல்ஹாசனுடன் இணைந்து, ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. இதனை ஒரு விழாவில், கமல்ஹாசனிடம் வெளிப்படையாகவே கூறினார்.
அன்று முதல் இன்று வரை, இவர் எப்பொழுது கமல்ஹாசன் படத்தில் இணைந்து நடிப்பார் எனப் பலரும் எதிர்ப்பார்த்து இருந்தனர். இந்நிலையில், தற்பொழுது அவர் இந்தியன் 2 திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.