கண்கள் எரிகின்றது! மூச்சு விட முடியவில்லை! பாதிக்கப்பட்டவர்கள் கதறல்!

07 May 2020 அரசியல்
visakhapatnamgas.jpg

விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எல்ஜி நிறுவனத்தின் பாலிமர் தொழிற்சாலையில் இருந்து, இன்று அதிகாலை மூன்று மணியளவில் ஸ்டிரைன் விஷ வாயுவானது, கசிய ஆரம்பித்தது. சரியாக அந்த தொழிற்சாலையினைச் சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்கு, இந்த விஷ வாயுவானது கசிந்துள்ளது.

தற்பொழுது நாற்பது நாட்களுக்கும் மேலாக, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், தான் அந்த விஷ வாயு நிரம்பிய கலனானது பராமரிக்கப்படவில்லை எனவும், இதுவே இந்த கசிவிற்கு காரணமாகவும் கூறப்படுகின்றது. இந்த விஷ வாயுவின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்கள் அனைவருமே, மருத்துவமனைகளில் கண்கள் பயங்கரமாக எரிகின்றது எனவும், எரிச்சலைத் தாங்க முடியவில்லை எனவும் கதறி அழுதுள்ளனர். மேலும், மூச்சுவிடச் சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர், இந்த விஷ வாயுவினைத் தாக்குப் பிடிக்க இயலாமல் மயக்கம் அடைந்து இருக்கின்றனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையைத் தொடங்கி உள்ளனர். சுமார், 5,000 டன் அளவிற்கு அந்த தொழிற்சாலையில், அந்த வாயு இருந்துள்ளது வெளியாகி இருக்கின்றது.

HOT NEWS