சித்ரா ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றாரா? கணவர் கைது! தூண்டியது யார்?

15 December 2020 சினிமா
vjchitra.jpg

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், அவருடைய கணவர் ஹேமநாத் தற்பொழுது கைது செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த வாரம், யாரும் எதிர்பாராத விதமாக சின்னத்திரை நடிகை சித்ரா, சொகுசு விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் உள்பக்கமாக அறையினை அடைத்து உள்ளே தற்கொலை செய்து கொண்டார். வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், பதறிய அவருடைய கணவர் ஹேமநாத் ஹோட்டல் ஊழியர் உதவியுடன் அக்கதவினைத் திறந்து பார்த்தனர். அதில், தான் உடுத்தியிருந்த சேலையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.

அவருடைய உடலை தூக்கில் இருந்து எடுத்து, படுக்கையில் படுக்க வைத்தனர். பின்னர், நசரத்பேட்டைப் போலீசாருக்குத் தகவல் கொடுத்து விசாரணையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, சித்ராவின் உடலைக் கைப்பற்றியப் போலீசார், பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என போலீசார் உறுதிபடுத்தினர். இருப்பினும், தொடர்ந்து, அவருடையக் கணவர் ஹேமநாத்திடம் 9வது நாளாக போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், சித்ராவுடன் அவர் சண்டையிட்டு தெரிய வந்தது. பலமுறை சித்ராவுடன் சண்டையிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் சித்ரா ஏற்கனவே ஒரு முறை, தூக்க மாத்திரை உண்டு தற்கொலை முயற்சி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், சமாதானம் செய்யப்பட்டதாகவும், நான் வேலைக்குச் செல்கின்றேன். நிறைய சம்பாதித்து தருகின்றேன். நீ மட்டும் எனக்கு கிடைத்தால் போதும் என, சித்ரா ஹேமநாத்திடம் கூறியிருக்கின்றார்.

ஆனால், அதனை ஹேமநாத் ஏற்கவில்லை எனவும், வாக்குவாதம் முற்றி செத்துத் தொல என ஹேமநாத் கூறியதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அதனை அவர் கூறியதால், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் பலத் திருப்பங்கள் ஏற்படும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றன.

HOT NEWS