சன் மியூசிக் சேனலில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர், மணிமேகலை. அவர் தற்பொழுது, விஜய் டிவியில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றார்.
அதில், விஜய் டிவியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய காதல் கணவர் உசேனுடன் கலந்து கொள்ள உள்ளார். அது குறித்த, வீடியோ ஒன்றினை அவர் வெளியிட்டுள்ளார். அதில், இந்த நடனத்த முதல்ல கத்துக்கணும், இல்லன்னா நடனம் தெரிந்தவங்களோட ஷோ பண்ணக் கூடாது. ஆடத் தெரியாம ரொம்பப் பப்பி ஷேமாப் போயிருச்சு. உசேன் உங்களுக்கு சவால் விடுகின்றேன். உங்களை விட, பெரிய டான்சரா வந்து காட்டுகின்றேன் எனக் கூறியுள்ளார்.
நடனக் கலைஞர் உசேனும், மணிமேகலையும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களுடையத் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.