வளரும் நாடுகளிடம் போய் சொல்! புதின் காட்டம்!

03 October 2019 அரசியல்
vladimirputin.jpg

கீரீட்டா துன்பெர்க்கின் ஹவ் டேர் யூ என்ற பேச்சிற்கு, ரஷ்ய அதிபர் புதின் பதிலடி கொடுத்துள்ளார்.

வளரும் நாடுகளிடம் சென்று, உலக சுகாதாரம் பற்றிப் பேசு என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். கடந்த வாரம் கீரீட்டா துன்பர்க் என்ற 16 வயது சிறுமி, ஐக்கிய நாடுகள் சபை நடத்தியக் கூட்டத்தில், ஹவ் டேர் யூ என்ற பேச்சினை பேசினார். அது, சமூக வலைதளங்களில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பேசும் பொருளாக மாறியது.

இது பற்றி, கருத்துத் தெரிவித்துள்ள விளாடிமிர் புதின், சென்று வளரும் நாடுகளிடம் போய் சொல், ஏன் இன்னும் ஏழையாக இருக்கின்றீர்கள், நீங்களும் ஏன் ஸ்வீடனைப் போல ஆகவில்லை என்று. மேலும், பேசிய புதின் கிரீட்டா துன்பர்க்கை ஒரு சில தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. ஆனால், கீரீட்டாவால் அவர்களுடையப் பெயர்களைக் கூற இயலவில்லை, என்றும் கூறியுள்ளார்.

HOT NEWS