வாக்காளர் அடையாள அட்டையை, ஆதாருடன் இணைக்க தேர்தல் ஆணையம் முடிவு!

09 October 2019 அரசியல்
aadhaarcard.jpg

விரைவில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்க, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒரு புதிய திட்டத்தினை மத்திய சட்ட அமைச்சகத்திடம் கூறியுள்ளது.

ஆதார் எண்ணை, வங்கி எண் மற்றும் பான் கார்டு உட்பட, பல வசதிகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம், குற்றங்களை எளிதாக தடுக்க இயலும் என மத்திய அரசு தெரிவிக்கின்றது. இந்நிலையில், பல இடங்களில் வாக்குகளை செலுத்துவதால், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நிலவி வருகின்றது.

இதனைத் தடுக்கு பொருட்டு, வாக்காள் அடையாள அட்டையையும் ஆதாருடன் இணைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால், தேர்தல் ஆணையம் திட்டம் ஒன்றினைத் தீட்டி, அதனை தற்பொழுது மத்திய சட்ட அமைச்சகத்திடம், அனுமதிக்காக அனுப்பியுள்ளது.

மத்திய அமைச்சகம் அனுமதி அளித்ததும், அனைவருடைய வாக்காளர் அடையாள அட்டையும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும் என நம்பப்படுகின்றது.

HOT NEWS

S