பாஜகவில் இணைந்த முன்னாள் திமுக உறுப்பினர் விபி துரைசாமி!

22 May 2020 அரசியல்
vpduraisamy.jpg

திமுகவில் இருந்து விலகிய திமுக உறுப்பினர் விபி துரைசாமி, பாஜகவில் இணைந்தார்.

திமுகவின் சார்பாக 2006 முதல் 2011ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை துணை தலைவராக இருந்தவர் விபி துரைசாமி. அவர் தற்பொழுது பாஜகவில் இணைந்துள்ளார். அவர் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பொழுது, தனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் எனக் கெஞ்சியதாகக் கூறியுள்ளார்.

அவர் பேசுகையில், வயதில் சிறியவர் என்றுக் கூடப் பார்க்காமல், உதயநிதியிடம் வாய்ப்புக் கேட்டுக் கெஞ்சினேன். ஆனால், எனக்கு வாய்ப்பளிக்கவில்லை என வருத்தம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவர் பாஜகவின் தலைவர் முருகனை சந்தித்துப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, அவரின் திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக, அந்தியூர் செல்வராஜ் பதவியில் அமர்த்தப்பட்டார். இதனிடையே, இன்று காலையில் சுமார் 9.30 மணியளவில், பாஜகவின் தலைமைச் செயலகமாக கமலாலயத்தில் சந்த்தித்தார். அதனைத் தொடர்ந்து அவர் பாஜகவில் இணைந்தார்.

இது குறித்து அவர் பேசுகையில், தான் மோடியின் மீது ஏற்பட்ட காரணத்தால் இதில் இணைந்ததாகவும், மோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல நல்லத் திட்டங்களை உருவாக்கி வருவதாகவும் கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS