VPN என்றால் என்ன?

10 March 2019 தொழில்நுட்பம்
tittlevpn.jpg

ப்பிராக்ஸி சர்வர்களைப் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த விஷயமே, இந்த வி.பி.என். {Virtual Private Network} என்பதே வி.பி.என்னின் சுருக்கம் ஆகும். இதனைப் பயன்படுத்துவதன் மூலம், நாம் நம்முடையத் தகவல்களை மிகப் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பரிமாற உதவுகிறது. இதனைப் பயன்படுத்தி, நாம் மற்ற நாட்டினருடைய IP அட்ரஸைப் பயன்படுத்த இயலும்.

இதனைப் பயன்படுத்தி, நாம் நம் நாட்டில் தடை செய்யப்பட்ட வலைத்தளங்களை எந்தத் தடையுமின்றிப் பயன்படுத்த இயலும். உதாரணமாக, சைனாவில் ஃபேஸ்புக் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வி.பி.என். பயன்படுத்துவதன் மூலம், அந்நாட்டு மக்களால் எந்தத் தடையுமின்றி, ஃபேஸ்புக்கைப் பயன்படுத்த இயலும். இது முற்றிலும் பாதுகாப்பானது, மற்றும் அரசாங்கத்தால் இதனைக் கண்டறிய இயலாது.

vpn

இந்த வகை வசதியை, உலகம் முழுக்கப் பல நிறுவனங்கள் இலவசமாகவும், கட்டணச் சலுகைகளுடனும், தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இலவச சேவையில், நம்மால் குறிப்பிட்ட அளவேப் பயன்படுத்த இயலும். பெரும்பாலான நிறுவனங்கள், தரமான வி.பி.என். சேவையை வழங்குகின்றன இருப்பினும் சேவைக் கட்டணங்கள் சேவைக்கேற்ப வேறுபடுகின்றன..

vpn1

1.வி.பி.என்.னைப் பயன்படுத்துவதன் மூலம் நம்மால் மிகப் பாதுகாப்பாகப் பயன்படுத்த இயலும்.

2.முழுமையானப் பாதுகாப்பு மற்றும் தடையற்ற ஆன்லைன் தேடலுக்கு வி.பி.என். உதவுகிறது.


பிரச்சனைகளும் சர்ச்சைகளும்

வி.பி.என்.னை அனைவரும் பயன்படுத்துவதில்லை. என்றாலும், இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கைக் கணிசமாக உயர்ந்து வருகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனை அதிகாமாக, ஹேக்கர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதுப் பாதுகாப்பான மேலும், குற்றம் செய்ய ஏதுவாக இருப்பதால் இதையும், ப்பிராக்ஸி சர்வர்களையும் பயன்படுத்துகின்றனர்.


கீழே உள்ள ஒரு சில நல்ல தரமான நிறுவனங்கள் சிறந்த வி.பி.என். சேவையை அளிக்கின்றன.

வாசகர்களுக்காக வி.பி.என் டவுன்லோட் லிங்க்குகள் இணைக்கப்பட்டுள்ளன

 

1 HIDE VPN


 

2 NORD VPN


 

3 PURE VPN


 

4 TOR GUARD VPN


 

5 HIDE MY ASS VPN


 

6 SPEDIFY


 

7 PHANTOM VPN


 

8 TUNNEL BEAR VPN


 

9 VIKING VPN


 

10 PRIVATE INTERNET ACCESS VPN

HOT NEWS