வால்டர் திரைவிமர்சனம்!

13 March 2020 சினிமா
walterreview.jpg

நீண்ட நாட்களுக்கு பிறகு, நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில், வால்டர் திரைப்படம் வெளியாகி உள்ளது. அதனால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் என்றேக் கூறலாம்.

உதவி காவல் கண்காணிப்பாளராக வால்டர் என்றக் கதாபாத்திரத்தில், நடிகர் சிபி சத்யராஜ் நடித்துள்ளார். வழக்கமான கதை தான் என்றாலும், மருத்துவக் குற்றங்களைப் பற்றி கூறி நம்மை சளிப்படையாமல் வைத்திருக்கின்றது இந்த வால்டர் திரைப்படம். பேசும் அளவிற்கு, இந்தப் படத்தில் என்ன இருக்கின்றது எனக் கேட்கலாம். அப்படி ஒன்று இருக்கின்றது என்றால், அது மருத்துவக் குற்றம் பற்றிய விவரங்களே.

மற்றபடி, ஊருக்குள் அரசியல்வாதி. அவருக்கு ஒரு அடியாள். அந்த அடியாளின் நண்பர் ஒரு மருத்துவர். திடீரென்று அந்த அடியாளர் மரணமடைகின்றார். அந்த மருத்துவர் காணாமல் போகின்றார். திடீரென்று மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகள் காணாமல் போகின்றன. போலீசார் கண்டுபிடித்து மீட்டுக் கொடுத்தாலும், அந்தக் குழந்தைகள் மரணமடைகின்றன. இவை அனைத்திற்கும் காரணம் யார், இடையில் நடக்கும் விபத்தால் சிபிக்கு என்ன ஆனது, காதலியைக் கைப்பிடித்தாரா என்பது தான், வால்டர் திரைப்படம்.

வால்டர் வெற்றிவேல் என, சிபியின் தந்தை சத்யராஜ், ஒரு மாபெரும் வெற்றிப் படத்தினை கொடுத்தவர். அவரை இவர் மிஞ்சுவார் என நினைத்துப் போய் பார்த்தால், நம்மை வழக்கம் போல ஏமாற்றி விட்டார். பெரிய அளவில் பாடல்கள் நம்மை ஈர்க்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. பெரிய காமெடி இல்லை. காதல் காட்சிகளிலும் நல்ல ஈர்ப்பு இல்லை.

படத்தினை எடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, இயக்குநர் எடுத்திருக்கின்றார் போல் இருக்கின்றது. முதல் பாதியினைக் காட்டிலும், இரண்டாவது பாதி பரவாயில்லை. இருப்பினும், படம் ஒரு முறை டிவியில் போட்டால் பார்க்கலாம் எனும் அளவிற்கே உள்ளது. படத்தின் பாடல் காட்களில், பலரும் தம் அடிக்கச் செல்வதைப் பார்க்க முடிந்தது.

மொத்தத்தில் வால்டர் அந்தர்பல்டி!

ரேட்டிங் 2.1/5

HOT NEWS