பொதுமக்கள் முன்னிலையில், கடந்த சனிக்கிழமை அன்று தோன்றினார் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன். அடுத்த நாளே, வட கொரிய இராணுவம், தன்னுடைய அடாவடியினை ஆரம்பித்துள்ளது.
கொரிய தீபகற்பமானது, இரண்டாம் உலகப் போருக்குப் பின், தென்கொரியா மற்றும் வடகொரியா என இரண்டாகப் பிரிந்தது. இதில், வடகொரியாவிற்கு, கிம் ஜோங் இல் தலைவராக இருந்து வந்தார். அவர் மரணத்தினைத் தொடர்ந்து, அவருடைய மகன் கிம் ஜோங் உன், தலைவராகப் பதவியேற்றார். வடகொரிய அதிபராக பதவியேற்றது முதல், தற்பொழுது வரை பல பிரச்சனைகளை அவர் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றார்.
அமெரிக்காவுடன் மோதல், தென் கொரியாவுடன் மோதல் என, அவருடைய மோதல்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து, ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை என, தன்னுடைய நாட்டின் ஆயுதப் பலத்தினை அதிகரித்துக் கொண்டே இருந்தார். அவருடைய வடகொரிய நாட்டின் மீது, சர்வதேசப் பொருளாதாரத் தடையானது, விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அவருக்கு ஏப்ரல் 11ம் தேதி அன்று, அறுவை சிகிச்சை நடைபெற்றது. மே-2ம் தேதி நடைபெற்ற, உரத் தொழிற்சாலை திறந்து வைக்கும் கூட்டத்தில், வடகொரிய அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்டார். அவருடைய அந்த செயலானது, அவருடைய மரணம் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதனிடையே, வடகொரிய இராணுவத்தினர், தென் கொரிய இராணுவத்தினர் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர்.
இரண்டு நாட்டு எல்லைகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள், ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டனர். இருப்பினும், இரு நாட்டு இராணுவ வீரர்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என, செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது தற்பொழுது, இரண்டு நாட்டு எல்லைகளுக்கும் இடையில், போர் பதற்றத்தினை ஏற்படுத்தி உள்ளது. வடகொரிய இராணுவத்தினை, தொடர்பு கொள்ள தென் கொரிய இராணுவம் முயற்சித்து வருகின்றது