ரசிகர்களின் மனதை, இந்தப் படத்தில் வரும் நாய், கண்டிப்பாக வெல்லும் என்பதில், எவ்வித சந்தேகமும் வேண்டாம்.
ஜிவிபிரகாஷ் நடிப்பில், ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாட்ச்மேன். இந்தப் படத்தினை, டோன்ட் பிரீத் என்றப் படத்தின் சாயலைக் கொண்டிருந்தாலும், சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். வில்லன் அணியும், ஜிவி அணியும் ஒரு வீட்டிற்குள் கொள்ளை அடிக்க செல்கின்றனர். அந்த வீட்டில் உள்ள லாக்கருக்குள், பணம் இருப்பதை இரண்டு குழுவும் அறிந்து கொண்டனர்.
இப்படம் முழுக்க ஒரு இரவில் நடக்கும் கதையாகவே உருவாக்கியிருக்கின்றனர். நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு இப்படத்தில் பேசப்பட வேண்டிய ஒன்று. படம் முழுக்க, வருகின்ற அந்த நாய்.
அதுவே இப்படத்தின் நாயகன். படம் முழுக்க, இந்த நாய் செய்யும் அட்டகாசங்களும், காமெடிகளும் அனைவரும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
யோகிபாபு மற்றும் ஜிவி பிரகாஷின் ஜோடி இந்தப் படத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
அந்த நாயின் நடிப்பு மற்றும் அதன் மூலம் உருவாகும் சிரிப்பும், இப்படத்தின் மிகப்பெரிய பலம்.
ஜிவி பிரகாஷ் மற்றும் யோகி பாபுவின் ஜோடி.
ஒளிப்பதிவு மற்றும் படத்திற்காக போடப்பட்டுள்ள ஷெட்டுகளை, பாராட்ட வேண்டும்.
சிறந்த திரைக்கதை மற்றும் சுவாரஸ்யமான கதை.
படத்தின் பின்னணி இசை. எங்கு எப்பொழுது, இசையை பயன்படுத்த வேண்டும் என, தெளிவாக யோசித்து பயன்படுத்தி இருக்கிறார்.