நடிகர் விஜய்க்கு உள்ள வெறித்தனமான ரசிகர்களைப் பற்றி, நாம் நன்கு அறிவோம். அதற்கு உதாரணம் என்று கூற வேண்டும் என்றால், பல சான்றுகளை வழங்கலாம். தலைவா படத்தில் தொடங்கி, தற்பொழுது வரை அவருக்கு பலரும் மெழுகு சிலைகள் வைக்கின்றனர்.
அப்படியொரு சிலையினை, கன்னியாகுமரி மாவட்ட விஜய் ரசிகர்கள் வைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மாயபுரி என்ற மெழுகு சிலைகளை வைக்கும் மியூசியத்தில், விஜய்க்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு அப்படியே, விஜய்யைப் போலவே மிகவும் தத்துரூபமாக வடிவமைத்து உள்ளனர். இருப்பினும், அந்த சிலைப் பார்ப்பதற்கு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கவின் போல இருப்பதாகவும், ஒரு சிலர் சமூக வலைதளங்களில் தங்களுடையக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனை விஜயின் ரசிகர்கள் தற்பொழுது, கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து, தன்னுடையப் படங்கள் மூலம் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை செய்து வரும் நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் எனவும், கூறி வருகின்றனர்.