வெ.இண்டீஸ் வெற்றி! சேசிங் தான் காரணமா?

09 December 2019 விளையாட்டு
indvswi2nd.jpg

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணித் தோல்வியைத் தழுவியது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி, பந்து வீச்சினைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்ய களமறிங்கியது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் வீரர்கள் ரோகித் ஷர்மா 15(18), லோகேஷ் ராகுல் 11(11), சிவாம் டூபே 54(30), விராட் கோலி 19(17), ரிஷாப் பண்ட் 33(22), ஷ்ரேயஸ் ஐயர் 10(11), ரவீந்திர ஜடேஜா 9(11), வாஷிங்டன் சுந்தர் 0(1) மற்றும் தீபக் சாஹர் 1(1) ரன்கள் எடுத்தனர்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் சார்பில், வில்லியம்ஸ் மற்றும் வால்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜேஸன் ஹோல்டர், காட்ரல் மற்றும் ப்பெர்ரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக் களமிறங்கியது.

அந்த அணியின் வீரர்கள் ஆரம்பம் முதலே ரன் குவிப்பில் ஈடுபட்டனர். லெண்டல் சிம்மன்ஸ் 67(45), ஈவின் லீவிஸ் 40(35), சிம்ரோன் ஹெட்மயர் 23(14), பூரான் 38(18) ரன்களை எடுத்தனர். வெ. இண்டீஸ் அணி, 18.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 173 ரன்கள் குவித்தது.

இந்திய அணியின் சார்பில், வாஷிங்டண் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். நடந்து முடிந்த இரண்டு டி20 போட்டிகளில், இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். இரண்டு போட்டிகளிலும், சேசிங் செய்பவர்கள் மட்டுமே வெற்றியினைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS