மே-17 வரை லாக்டவுன்! எதற்கெல்லாம் அனுமதி?

01 May 2020 அரசியல்
coronamadurai.jpg

மே-3ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவானது, முடிய உள்ள நிலையில், தற்பொழுது அதனை மேலும் இரண்டு வாரங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியத் தேவைகளை தவிர்த்து, பொதுமக்கள் வெளியில் நடமாடக் கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிற மண்டலங்களுக்கு என, பலவித விதிகளும், விதிவிலக்குகளும் தற்பொழுது அறிவிக்கப்பட்டு உள்ளன.

கிராமப் புறங்களில் செங்கல் தொழில், விவசாயம், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மதுபானம், புகையிலை பொருட்களை விற்க அனுமதி உண்டு. ஆனால், அவைகளைப் பொது இடங்களில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியினைப் பின்பற்றியே, எதையும் வாங்க வேண்டும்.

சிவப்பு மண்டலம்

33% ஊழியர்களுடன், அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஐடி நிறுவனங்கள், பிபிஓ நிறுவனங்கள், பிரிண்டிங் பிரஸ், குளிர்பதன கிடங்குகள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

காரில் ஓட்டுநருடன் ஒருவர் அமர்ந்து பயணம் செய்யலாம். டூவீலரில், ஓட்டுபவரைத் தவிர்த்து வேறு யாரும் செல்லக் கூடாது. அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டுமே, ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற அனுமதி. கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தொழில்துறையினர், சமூக இடைவெளியினைக் கடைபிடித்து, குறிப்பிட்ட அளவிலான ஊழியர்களுடன் இயங்க அனுமதி.

ஆரஞ்சு மண்டலம்

சிவப்பு மண்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவைகளுடன் சேர்த்து, டாக்சிக்கு அனுமதி. ஆனால், ஒருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.

பச்சை மண்டலம்

பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், 50% உள்ளூர் பேருந்துகளை இயக்கலாம். மேலும், அனைத்து வசதிகளுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. திரையறங்குகள், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் திறக்கத் தடை தொடரும். முமூடி அணிந்தே, வெளியில் நடமாட வேண்டும். அத்தியாவசியத் தேவைகளுக்காக, காலை ஏழு மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே வெளியில் நடமாட அனுமதி வழங்கப்படுகின்றது.

ரயில்கள் சேவை, விமான சேவை, மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை நீடிக்கும்.

HOT NEWS