நாளை முதல் அமலுக்கு வரும் ஊரடங்கு தளர்வுகள்!

10 May 2020 அரசியல்
edappadicovid19.jpg

நாளை முதல் மேலும் பல சேவைகளுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, வருகின்ற மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், தமிழகத்தின் வருவார்ய கணிசமாக குறைந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலனைக் கருதியும் தற்பொழுது பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை முதல் இந்த ஊரடங்குத் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. இருப்பினும், சென்னையில் இந்த ஊரடங்குத் தளர்வுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தனிக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விவசாயம் சார்ந்தப் பொருட்களை வழங்கும் கடைகள், விவசாயக் கருவிகளை விற்கும் கடைகள், டீக் கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அத்தியாவசிய மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

டீக்கடைகளில், தினமும் ஐந்து முறை கிருமி நாசினிகளைப் பயன்படுத்த வேண்டும். பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பெட்ரோல் பம்புகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தனியார் நிறுவனங்கள் அனைத்தும் 33% ஊழியர்களுடன் இயங்க அனுமதி.

பெருநகரமான சென்னை காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை ஆறு மணி வரையிலும் இவைகள் இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. மற்ற இடங்களில் காலை 10 மணி முதல் இரவு ஏழு மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதே போல், பெட்ரோல் பம்புகளும் பெருநகர சென்னை காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மற்றப் பகுதிகளில் காலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. முடி வெட்டும் கடைகள், அழகு நிலையங்கள், மால்கள், திரையறங்குகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அனைத்து இடங்களிலும், சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் எனவும், இல்லையென்றால், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் விற்பனை நிலையங்கள், மிக்சி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள், டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள், பெட்டிக் கடைகள், பர்னிச்சர்கள், உலர் சலவையகங்கள், கூரியர், பார்சல் சர்வீஸ், லாரி புக்கிங் சர்வீஸ், ஜெராக்ஸ் கடைகள், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் விற்பனைக் கடைகள், மரக்கடைகள், பிளைவுட், மரம் அறுக்கும் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.

மரக்கடைகள், பிளைவுட், மரம் அறுக்கும் கடைகளுக்கு அனுமதி, பெயின்ட் கடைகள், எலக்ட்ரிக் கடைகள், டைல்ஸ் கடைகளுக்கு அனுமதி, நர்சரி கார்டன்கள், நாட்டு மருந்து விற்பனைக் கடைகள், விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனைக் கடைகள், ஊரகப் பகுதிகளில் குளிர்சாதன வசதி இல்லாத சிறிய ஜவுளிக் கடைகளுள், குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகைக்கடைகள், மோட்டார் எந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், மொபைல், கணினி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகற், மின்சாதனப் பொருட்கள் மற்றும் பழுதுநீக்கும் கடைகள், சிமென்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகற், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

HOT NEWS