பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள், தற்பொழுது என்ன செய்கின்றார்கள் என யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு, அவர்களுடைய மார்க்கெட்டானது கேள்விக்குறியாகி விட்டது. பரபரப்பாக பேசப்பட்ட, ஓவியாவும் புஸ்வானம் போல் ஆகிவிட்டார்.
ஆனால், சினிமாவிற்கும் கலைத்துறைக்கும் துளியும் சம்பந்தமில்லாத ஜூலியோ எளிதாக செட்டிலாகி விட்டார். புதிதாகப் படங்கள், நிகழ்ச்சிகள் என கமிட்டாகி மேடம் ரொம்பவே பிஸியாகத் தான் இருக்கின்றார். உண்மையில், இவர் காட்டில் தான் அடைமழை பெய்கின்றது. பெரிய அளவில் இவர் எதுவும் செய்யவில்லை. நல்ல பெயரையும் பெறவில்லை. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய நடவடிக்கைகள் மற்றும் செயல்கள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டன.
தற்பொழுது, கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இது குறித்து தன்னுடைய டிவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில், உங்கள் வேலை என்ன, நீங்கள் ஏன் நர்ஸ் வேலைக்குச் செல்லவில்லை என ரசிகர்கள் கேள்விக் கேட்டுள்ளனர். அதற்குப் பதிலளித்துள்ளார் ஜூலி.
எல்லாரும் அதனையே என்னிடம் கேட்கின்றனர். நான் இப்பொழுது நடித்துக் கொண்டு இருக்கின்றேன். நர்ஸிங் என்பது மிகவும் புனிதமானத் தொழில். அதற்கு முழுமையான அர்பணிப்பும், கடுமையான உழைப்பும் தேவை. மற்ற வேலைகளைப் போல அது அல்ல. இரண்டு வேலைகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது சுலபமல்ல. என்னால், நோயாளிகளின் உயிருடன் விளையாட முடியாது எனப் பதிவிட்டுள்ளார்.