வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கவலைக்கிடம்! அமெரிக்கா செய்தி நிறுவனம் தகவல்!

21 April 2020 அரசியல்
kimjongunse.jpg

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கவலைக்கிடமாக உள்ளதாக, அமெரிக்காவின் சிஎன்என் மற்றும் ப்ளூம்பெர்க் நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது.

அமெரிக்காவின் தலைவலியாகவும், வட கொரியாவின் தலைவராகவும் இருப்பவர் அதிபர் கிம் ஜோங் உன். அவர் தொடர்ந்து அமெரிக்காவிற்கு எதிராக, ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை, அணு ஆராய்ச்சி உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வந்தார். இதனால், இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் மூலம் அபாயம் உருவாகி இருந்தது.

இந்நிலையில், இரு நாட்டுத் தலைவர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசினர். இதன் பின்னரும், தொடர்ந்து ஏவுகணை சோதனையில் வடகொரியா ஈடுபட்டு வந்தது. இதற்கிடையில், தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. வடகொரியாவில், இந்த வைரஸ் தொற்று இல்லை என அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்தார். தற்பொழுது அவர் கவலைக்கிடமாக இருப்பதாக சிஎன்என் தெரிவித்து உள்ளது.

அவருக்கு கடந்த ஏப்ரல் 12ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அவருடைய அதிகப்படியான புகைப்பழக்கம், உடல் எடை அதிகரிப்பு மற்றும் வேலை டென்ஷன் காரணமாக, அவர் இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அவர் கடைசியாக ஏப்ரல் 11ம் தேதி அன்று, வீடியோ ஒன்றில் பேசினார்.

அதன் பின்னர், அவர் பொது இடங்களிலும், செய்திகளிலும் வராத காரணத்தால், அவர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகின்றது. இது போல், இதுவரை சுமார் 10க்கும் மேற்பட்ட முறை, இது போன்ற செய்தியானது வெளியாகி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS