பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா? உண்மை என்ன?

29 April 2020 அரசியல்
northkoreaview.jpg credit:www.planet.com

வடகொரியா தற்பொழுது பெரிய இறுதி ஊர்வலத்திற்கு, தயாராகி வருவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.

பிளானட் லேப்ஸ் வெளியிட்டுள்ளப் புகைப்படத்தில், தற்பொழுது தற்காலிக கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவைகள், இராணுவ வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக இருக்கலாம் என்றுக் கூறப்படுகின்றது. கடந்த ஏப்ரல் 11ம் தேதி அன்று, நடைபெற்ற இருதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பொதுமக்களின் பார்வையில் சிக்கவில்லை.

இதனால், அவர் மரணமடைந்து விட்டார் எனவும், கோமாவில் இருக்கின்றார் எனவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த செய்தி நிறுவனங்கள் தகவல்களைத் தெரிவிக்கின்றன. அதிகப்படியான குடிப்பழக்கம், அதிகப்படியான புகைப்பழக்கம், அளவுக்கு மீறிய நொறுக்குத் தீனி உள்ளிட்டவைகளுக்கு வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன் அடிமையாக இருந்துள்ளார். மேலும், அதிக வேலைப்பளு காரணமாக, அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதனால், அவருடைய இதயம் பலகீனமானதைத் தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சைச் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் வடகொரியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு விடுதியில் ஓய்வு எடுத்து வருவதாக, தென் கொரியா கூறியது.

இருப்பினும், சீனா, தென் கொரியா, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த செய்தி நிறுவனங்கள், அதிபர் கிம் இறந்து விட்டதாக கூறுகின்றன. அவர் உயிருடன் இருந்தாலும், கோமாவில் தான் இருக்க வேண்டும் எனவும் கூறுகின்றன.

இதனிடையே, வடகொரியாவின் தலைநகரான பியாங்கியானில் தற்காலிக கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவைகள் இராணுவ ஒத்திகைக்காக இருக்கலாம் என்று கூறப்படுகின்றன. இவைகள் போன்று தான், அதிபர் கிம்மின் தந்தை கிம் ஜோங் இல் மரணமடைந்த பொழுதும், கட்டிடங்கள் உருவாக்கப்பட்டன. அவைகள், இறுதி ஊர்வலத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. இதனால், வடகொரிய மக்கள் கவலையில் உள்ளனர். இது குறித்துப் பேசிய அதிபர் ட்ரம்ப், கிம் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகின்றன.

அவ்வாறு இருக்கக் கூடாது எனவும், அவர் நலமடைய ஆண்டவனை வேண்டிக் கொள்வதாகவும் கூறினார். இதனிடையே, டோங்கா வலைதளத்தின் செய்தியில், கடந்த வாரம் அதிபர் கிம், அவருடைய சொந்த விடுதியில், வாக்கிங் சென்றதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS