காஷ்மீர் பிரச்சனைத் தற்பொழுது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என அமித் ஷா இன்று லோக்சபாவில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து விரைவில் ரத்து செய்யப்பட உள்ளது.
இந்த சிறப்பு அந்தஸ்த்தால், காஷ்மீருக்க என்னென்ன கிடைத்தது எனப் பார்ப்போம்.
மத்திய அரசு புதிய சட்டங்கள் இயற்றினால், அதில் ராணுவம், தொலைத் தொடர்பு, வெளியுறவு ஆகியவை சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதுவும் செல்லாது.
ஜம்மூ மற்றும் காஷ்மீரில் மற்ற மாநிலத்தவர்கள் சொத்துக்களை வாங்கவோ அல்லது விற்கவோ இயலாது. ஆனால், அம்மாநிலத்தவர்கள் எங்கு வேண்டுமானாலும், சொத்துக்களை வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
காஷ்மீருக்கு என, தனிக் கொடியும் தனி அரசியல் சின்னம் ஒன்றும் உள்ளது.
ஜம்மூ-காஷ்மீர் எல்லைப் பகுதிகளை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ இயலாது.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள, சட்ட மன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும். மற்ற மாநிலங்களுக்கு ஐந்து ஆண்டுகள் மட்டுமே.
மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களை, மாநில சட்டப் பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டு வருவதன் மூலம், எளிதாக மத்திய அரசின் சட்டங்களை நீக்க, ரத்து செய்ய முடியும்.
ஜம்மு-காஷ்மீரில் பிறந்த பெண்கள், வேற்று மாநிலத்தவரை திருமணம் செய்தால், அவர்களாலும் அங்கு சொத்துக்களை வாங்க இயலாது. ஆனால், காஷ்மீர் மாநில ஆண்கள், மற்ற மாநிலப் பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். மற்ற மாநிலங்களில், சொத்துக்களை வாங்கலாம்.
ஐபிசி எனப்படும் இந்திய அரசியல் சாசனத்தின் 238வது பிரிவானது, காஷ்மீருக்குக் கிடையாது. அங்கு இந்த சட்டத்தைப் பயன்படுத்த முடியாது.
இவைகள் அனைத்தும் ஐபிசி 370வது சட்டத்தின் கீழ் ஜம்மூ மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்டன. ஆனால், தற்பொழுது 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதால், இனி காஷ்மீர் மாநிலத்திற்கு கிடைத்து வந்த சலுகைகள் இனி கிடைக்காது.