உலகையேத் தற்பொழுது பதற வைக்கும் ஒரு விஷயம் என்றால், அது கொரோனா வைரஸ் தான். ஏன் என விவரிக்கின்றது இந்த கட்டுரை!
இந்த கொரோனா வைரஸ் சுமார் 10,000 ஆண்டுகள் பழைமையான குடும்பத்தினை சார்ந்த ஒரு வைரஸ். இது கொரோனா குடும்பத்தின் ஏழாவது வெர்ஷன் என்றுக் கூறலாம். அந்த அளவிற்கு இந்த வைரஸ் பல முறை, உலக வரலாற்றில் பல தாக்கங்களை உருவாக்கியது.
வைரஸ் என்பது உயிருள்ளதும் அல்ல, அதே சமயம் உயிரற்றதும் அல்ல. சுருக்கமாகச் சொன்னால் ஒரு ஜாம்பி மாதிரி என வைத்துக் கொள்ளுங்கள். இந்த வைரஸ்கள் உயிருள்ள மிருகங்கள், பறவைகள், மனிதர்கள் என யாரையும் விட்டு வைக்காது. ஒரு முறை வைரஸ் ஒரு உயிருள்ள உடலுடன் இணைந்து விட்டால், அந்த உடலினைப் பயன்படுத்தி வாழ்ந்து கொள்ளும். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக, உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியினை அழித்து, அதில் பரவ ஆரம்பிக்கும்.
இவ்வாறு பரவும் வைரஸானது, அந்த உயிரில் எடுத்துக் கொள்ளப்படும் ஆற்றலைப் பயன்படுத்தி உயிர் வாழ ஆரம்பிக்கும். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக உடலின் உள்ளுறுப்புகளை சிதைக்க ஆரம்பிக்கும். இது தான் நமக்கு அறிகுறியாக உடலில் தெரியும். ஆனால், இந்த வைரஸ்களை அழிப்பதற்கு இயற்கையாகவே, நம்முடைய உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியானது, மீண்டும் புத்துணர்ச்சிப் பெற்று அந்த வைரஸினை அழிக்க முயலும்.
ஆனால், சற்று பின் வாங்குவது போல் இருந்து விட்டு, மீண்டும் வைரஸானது தன்னுடைய வீரியத்தை வளர்த்துக் கொள்ளும். பின்னர், எதிர்ப்பு சக்தியினை முற்றிலும் அழித்துவிடும் செயலில் இறங்கிவிடும். இந்த சூழ்நிலையில், அந்த உடலானது, மிகவும் மோசமான சூழ்நிலைக்குச் செல்லும். பின்னர், அந்த வைரஸால் உடல் செயழிந்து இறக்கும் பொழுது, அதில் பரவி இருக்கும் வைரஸானது பரவாமல் அப்படியே அங்கேயே இருக்கும்.
அந்த உடல் மண்ணில் மட்கும் வரை, அந்த உடலில் இருந்து கொண்டே இருக்கும். இதற்கிடையில், அந்த உடலினை எந்த மிருகமாவது அல்லது பறவையாது கடித்து உண்டால், அந்த உணவுடன் இந்த வைரஸூம் உடலில் கலந்து விடும். இப்படித் தான் வைரஸ் தற்பொழுது வரை செயல்படுகின்றது.
இந்த வைரஸ்களில், டிஎன்ஏ வைரஸ் மற்றும் ஆர்என்ஏ வைரஸ் என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன. இதில், கொரோனா வைரஸானது, ஆர்என்ஏ வைரஸ் ஆகும். பெரியம்மை மற்றும் சின்னம்மை போன்றவை டிஎன்ஏ வைரஸிற்கு உதாரணங்கள் ஆகும். இவைகளுக்கு தற்பொழுது மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. மேலும், இந்த வைரஸ்களை எதிர்க்கும் சக்தியானது, நம்முடைய உடலில் இயற்கையாகவே உருவாகி விடும்.
ஆனால், இந்த ஆர்என்ஏ வைரஸ்கள் மிகவும் கொடியவை. சார்ஸ், ரேபிஸ், எபோலா, போலியோ முதலியவைகள் மிகவும் மோசமானவை. இந்த வைரஸ்களுக்கு குறைந்த அளவிலான மருந்துகளே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும் ஏன் அரசாங்க அமைப்புகள் இந்த குறிப்பிட்ட சில நோய்கள் பெயரினைக் கேட்டதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று. அந்த அளவிற்கு இந்த ஆர்என்ஏ வைரஸ்கள் மிகக் கொடியவை. சார்ஸ் வைரஸால் பல ஆயிரம் இறந்தனர். ரேபிஸ் மற்றும் எபோலா வைரஸ் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். இந்த ஆர்என்ஏ வைரஸ்கள் மிக விரைவாகப் பரவும் தன்மையுடையவை. இதன் வீரியமும் அதிகம். மருந்துகளும் குறைவாகவே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகின்றது.
இந்த கொரோனா வைரஸ்ம், ஆர்என்ஏ வைரஸ் குடும்பத்தினை சார்ந்தது தான்.முதன் முறையாக இந்த கொரோனா வைரஸினை, மனிதர்கள் 1892ம் ஆண்டு கண்டுபிடித்தனர். அப்பொழுது இந்த வைரஸினைப் பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், இதனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குள் பதிவுகளே இல்லாமல், பல ஆயிரம் பேரின் உயிரினை பறித்துள்ளது என்பது தான் உண்மை. இந்த கொரோனா வைரஸானது கிமு 8100 ஆண்டின் பொழுதே இருந்திருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகள் மிகப் பழமையான வைரஸ் இது, என்று குறிப்பிட்டால் மிகையாகாது.
மனிதனால் 1892ம் ஆண்டு, இந்த வைரஸ் குடும்பம் கண்டறியப்பட்டாலும், இதனால் 1965ம் ஆண்டு தான் மனிதனுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. அதுவரை, இதனால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எவ்வித பதிவோ அல்லது குறிப்போ இல்லை.
இந்த கொரோனா வைரஸில், மொத்தம் ஆறு பிரிவுகள் ஏற்கனவே உருவாகி இருந்தன. தற்பொழுது உருவாகி இருப்பது, ஏழாவது பிரிவு. இதனை அப்டேட் என்று கூடக் கூறலாம். முதலில் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கோரோனா வைரஸானது, ஹூயூமன் கொரோனா வைரஸ் 229ஈ. அடுத்தது, ஹூயூமன் கொரோனா வைரஸ் ஓசி43. இதனைத் தொடர்ந்து சார்ஸ், ஹூயூமன் கொரோனா வைரஸ் என்எல் 63, ஹூயூமன் கொரோனா வைரஸ் ஹெச்கேயூ1. இவைகளை அடுத்து, மெர்ஸ் வகை கொரோனா வைரஸ் தாக்கியது. தற்பொழுது பரவி வரும் கொரோனா வைரஸ்க்கு நாவல் கொரோனா வைரஸ் அல்லது ஊஹான் நிம்மோனியா எனப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த வைரஸால் பெரும்பாலும், பாலூட்டி உயிரினங்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. அல்லது இந்த பாலூட்டி உயிரினங்களை உண்ணும் மற்ற உயிர்களுக்கும் இது எளிதாக பரவுகின்றது.
தற்பொழுது பரவி வரும் கொரோனா வைரஸ் பெயர் தான், நாவல் கொரோனா வைரஸ் அல்லது ஊஹான் நிம்மோனியா. இந்த வைரஸிற்கு, இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதே சமயம், இது எப்படிப் பரவுகின்றது என்பதுப் பற்றியப் பெரிய அளவிலானத் தகவலும் இல்லை. இது எங்கு தோன்றியது என்றும் தெரியவில்லை.
ஆனால், தற்பொழுது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளின் மூல்ம, ஊஹான் மாகாணத்தில், உள்ள விலங்குகள் சந்தையில் இருந்து இது பரவ ஆரம்பித்து இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில், மருத்துவமனைக்கு வந்த நபர், காய்ச்சல் அடிப்பதாக கூறியுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு, எவ்விதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதுப் பற்றி தெரியவில்லை. இதனையடுத்து, சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு ஆய்வில் இறங்கியது. அதில், இருக்கு பல்லாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கொரோனா வைரஸ் குடும்பத்தினைச் சேர்ந்த வைரஸால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரைத் தனிமைப்படுத்தி அவரிடம் தொடர்ந்து விசாரித்தனர். அவருடைய உடலில் உள்ள இரதத்தின் மாதிரியினை எடுத்து, ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அப்பொழுது, பாதிக்கப்பட்டவரின் இரதத்தில் சூரியனைப் போல இந்த வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர், ஊஹான் மாகாணத்தில் உள்ள, விலங்குகளை உணவிற்காக விற்கும் சந்தைக்குச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, அந்த சந்தைக்குச் சென்ற ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர். பின்னர், ஊஹான் மருத்துவமனையில், இதே போன்ற அறிகுறியுடன் பலரும் வர ஆரம்பித்ததும், அவர்களிடமும் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் அனைவருமே, அந்த விலங்குகளை விற்கும் சந்தையுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து விலங்குகளை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர். அவைகளில் பல விலங்குகள், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த விலங்குகளை கைப்பற்றி, ஆராய்ச்சிக்காக ஆய்வகத்திற்கு அனுப்பினர். அப்பொழுது அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களுடைய ஆய்வின் படி, வீரியமான இந்த கொரோனா வைரஸானது, வவ்வால்களுக்குப் பரவி இருக்க வேண்டும். பின்னர், இதனை கட்டு விரியான் பாம்புகள் சாப்பிட்டு இருக்க வேண்டும். இதனால், இந்த கொரோனா வைரஸானது அதிக பலமடைந்து உருமாற்றம் அடைந்திருக்க வேண்டும்.
அந்தப் பாம்பினை, இவர்கள் சந்தைக்குக் கொண்டு வரும் பொழுது மற்ற மிருகங்களுக்கும் இந்த வைரஸானது பரவி இருக்கலாம் என கருதுகின்றனர். அல்லது தண்ணீர் பாம்பிலிருந்து இந்த வைரஸானது, மனிதருக்குப் பரவி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவில், பாம்புகளை சூப் வைத்துக் குடிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஷயம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தற்பொழுது ஊஹான் மாகாணத்தினை சுற்றி வேலை அமைத்து, யாரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து வருகின்றது சீன அரசாங்கம். மேலும், ஊஹான் மாகாணத்தில் இருந்து யாரையும் வெளியில் அனுமதிக்கவும் இல்லை. இதனால், இந்த வைரஸ் பரவாமல் தடுக்க இயலும் என்று கூறப்படுகின்றது. ஆனால், இந்த வைரஸானது ஏற்கனவே, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, தாய்லாந்து, ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா, வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானப் பயணிகள் மூலம் சென்றுவிட்டது என அந்நாட்டு அரசாங்கங்களே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளன.
இந்த வைரஸால், தற்பொழுது 85000க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டு உள்ளனர். மேலும், இவர்களில் பெரும்பாலும் குழந்தைகளும், 45 வயதிற்கு அதிகமானவர்களே பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலால், 41 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகின்றது. இதனால் ஏற்படும் உயிரிழப்பானது, மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வைரஸானது, நம்முடைய நுரையீரலைத் தான் முதலில் தாக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. முதலில் சளி பிடிக்கும். பின்னர், சாதாரண காய்ச்சல் போல வரும். அதனைத் தொடர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக இருமலால் மூச்சுத் திணறல் உள்ளிட்டவை ஏற்படும். இதனை சரியாக கவனிக்காவிட்டால் கடைசியில் மரணம் ஏற்படுகின்றது. இந்த கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் வெளிப்படுவதற்கு, இரண்டு முதல் இரண்டு வாரங்கள் வரை ஆகும் என கணிக்கப்பட்டும் உள்ளது.
தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி, இந்த வைரஸானது ஒரு மனிதரிடம் இருந்து, மற்றொரு மனிதருக்குப் பரவும் தன்மையுடையதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், சீனாவின் பெரும்பாலான மக்கள், முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு நடமாடுகின்றனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களில், 34% பேர் தற்பொழுது வரை உயிரிழந்துள்ளனர் என்பது அதிர்ச்சி கலந்த கஷ்டமான விஷயமாகும். இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.