EIA 2020 என்ன தான் பிரச்சனை? ஒரு முழுமையான பார்வை!

29 July 2020 அரசியல்
treedamage.jpg

சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீடு 2020 வரைவு சட்டத்தினால், தற்பொழுது புதிய பிரச்சனை எழுந்துள்ளது. இது குறித்து விரிவாக அலசுகின்றது என்ற பதிவு.

1986ம் ஆண்டு இந்திய அரசு புதிய சட்டத்தினை உருவாக்கியது. அதன்படி, இந்தியாவில் யார் தொழில் துவங்கினாலும், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளை அமைத்தாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்படி, முறையான அனுமதியினை வாங்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத நிலையில், அரசு அனுமதி வழங்கும்.

நீங்கள் வசிக்கும் பகுதியில் தொழிற்சாலை ஒன்று அமைய உள்ளது என்றால், அந்த தொழிற்சாலையானது முதலில் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையினைத் தயார் செய்ய வேண்டும். எவ்வளவு பரப்பளவில் தொழிற்சாலை தயாராக உள்ளது. அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளின் அளவு எவ்வளவு, கழிவுகளை எவ்வாறு மேலாண்மை செய்வது என்பது குறித்த அனைத்தும் அந்த அறிக்கையில் அடக்கம்.

ஆனால், தற்பொழுது இதில் புதிய மாற்றத்தினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தேசத்தின் நலம் சார்ந்த திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் மதிப்பீடு தேவையில்லை என்றுக் கூறியுள்ளது. இந்த அறிக்கையின் 22 மொழிகளில் வெளியிட நீதிமன்றம் கூறியிருந்த போதிலும், தற்பொழுது வரை இந்த அறிக்கையானது 22 மொழிகளில் வெளியாகவில்லை.

குறிப்பிட்ட சில பெரிய நிறுவனங்களுக்காக, மத்திய அரசு இத்தகைய திருத்தத்தினை செய்துள்ளதாகப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சட்டத் திருத்தத்தால், தொழிற்சாலை அமைவது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கால அளவானது, 30 நாட்களில் இருந்து 20 நாட்களாகக் குறைக்கப்பட்டு உள்ளது. மேலும், ஏற்கனவே, நடைமுறையில் உள்ள திட்டங்களை விரிவாக்கம் செய்யவும் அனுமதி அளிக்கின்றது. இதனால், இயற்கை மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையானது கடுமையாகப் பாதிக்கப்படும் என, சுற்றுச்சூழல் ஆய்வாலளர்கள் கருதுகின்றனர்.

HOT NEWS