கொரோனா வைரஸ்! தமிழகத்தின் நிலை என்ன?

04 May 2020 அரசியல்
vijayabaskarcovid.jpg

கொரோனா வைரஸ் பாதிப்பில், இந்திய அளவில் தமிழகம் தற்பொழுது நான்காவது இடத்தில் உள்ளது.வீடுகளுக்கே மருந்து வரும்! அனைத்து மாவட்ட விவசாயிகளும் தங்களது நெல்லினை நேரடி கொள்முதல் செய்வதற்கு 044-26426773 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் - அமைச்சர் காமராஜ். மருந்து வேண்டுமா? 18001212172 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவானது, மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளன. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து, பிற அனாவசிய விஷயங்களுக்காக வெளியில் வரக் கூடாது என, கூறப்பட்டு உள்ளது.

இது பற்றி, தமிழக அரசு தன்னுடைய அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தகவல்களைப் பகிர்ந்துள்ளது. தற்பொழுது வரை, தமிழகத்தில் 2,10,538 நபர்கள் சோதனை செய்யப்பட்டு உள்ளனர். அதில், சந்தேகப்படும் விதத்தில் இருந்த 22,049 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கவனிக்கப்பட்டு வருகின்றனர். 3,371 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. 1884 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 28 நாள் வீட்டுக் கண்காணிப்பு முடித்தவர்கள்-63380

35036 இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. அதில், 2526 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 27,192பேருக்கு இந்த தொற்று இல்லை என நிரூபணமாகி உள்ளது. 1312 பேர் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பி உள்ளனர். இந்த நோய் தொற்றால், துரதிர்ஷ்டவசமாக தமிழகத்தில் 30 பேர் மரணமடைந்து உள்ளனர். அரசுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் 1884.

இன்று ஒரே நாளில் 205 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

HOT NEWS