வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு! இனி இப்படித் தான் பயன்படுத்த முடியுமாம்!

09 April 2020 அரசியல்
whatsapp.jpg

கொரோனா வைரஸ் பரவி வருவதை முன்னிட்டு, புதியக் கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளது வாட்ஸ் ஆப் நிறுவனம்.

பொதுவாக வாட்ஸ்ஆப்ப்பில் எதையாவது பார்வேர்ட் செய்ய வேண்டும் என்ற நினைத்தால், குறைந்தது ஐந்து பேருக்கு ஒரே நேரத்தில் சேர் செய்ய இயலும். இதன் மூலம், விரைவாக நாம் நினைத்த தகவலானது, விரைவாகப் பரவும். ஆனால், அதற்குத் தற்பொழுது புதியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன் படி, இனி அவ்வாறு சேர் செய்ய இயலாது. ஒரு நேரத்தில், ஒரு முறை மட்டுமே சேர் செய்ய இயலும். மேலும், அதிகமாகப் பார்வேர்ட் செய்யப்பட்ட தகவல்களை ஐந்து நபர்களுக்கு மேல், சேர் செய்ய முடியாது என்றுக் கூறியுள்ளது. வாட்ஸ் ஆப் மூலம், கொரோனா வைரஸ் குறித்து அதிகளவில் வதந்திகள் பரவி வருவதால், இந்த முடிவினை வாட்ஸ் ஆப் நிறுவனம் எடுத்துள்ளது. இது தற்பொழுது நடைமுறைக்கும் வந்துள்ளது.

HOT NEWS