வைரஸால் 80% குறைந்த வாட்ஸ் ஆப் டவுன்லோட்!

06 November 2019 தொழில்நுட்பம்
whatsapp.jpg

பெகஸஸ் எனப்படும், வைரஸானது, வாட்ஸ் ஆப் மூலம் பரவி வந்தது. அந்த வைரஸ் நம்முடைய செயல்களை உளவு பார்க்கும் தன்மையுடையது என்ற, அதிகாரப்பூர்வத் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, வாட்ஸ் ஆப்பினை டவுன்லோட் செய்யும் அளவு முற்றிலுமாக சரிந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 17 முதல் அக்டோபர் 25ம் தேதி வரை சுமார் 89 லட்சம் பேர் உலகளவில் வாட்ஸ் ஆப்பினை டவுன்லோட் செய்தனர்.

இந்த வைரஸ் பரவ ஆரம்பித்ததை அடுத்து, கடந்த அக்டோபர் 26ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை வெறும் 13 லட்சம் பேர் மட்டுமே, வாட்ஸ் ஆப்பினை டவுன்லோட் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 80% அளவிற்கு வாட்ஸ் ஆப் டவுன்லோட் குறைந்துள்ளது.

வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்பொழுது, பயனர்களின் தகவல் பாதுகாப்பே முக்கியம் என அறிவித்து உள்ளது. மேலும், இந்த வைரஸ் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.

HOT NEWS