தொடர்ந்து வாட்ஸ் அப் மீது, பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வெளியான நிலையில், தற்பொழுது வாட்ஸ்அப்பில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் படி, இனி வாட்ஸ் அப் பயன்படுத்துவோரை, யார் யாரெல்லாம் வாட்ஸ்அப் குழுக்களில் இணைக்கலாம். யாரெல்லாம் இணைக்க கூடாது என, புதிய செட்டிங்ஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பல குழுக்களில் பொய்யான செய்திகளும், வதந்திகளும் பரவி வந்த நிலையில், இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இனி யாரெல்லாம் உங்களை குழுக்களில் இணைக்கலாம், யாரெல்லாம் உங்களை குழுக்களில் இணைக்க முடியாது என நீங்களே உங்கள் வாட்ஸ்அப்பில் தேர்ந்தெடுக்கலாம்.
அதற்கு பின்வரும் செட்டிங்சை பயன்படுத்தலாம்.
Account->Privacy->Groups
இதில் சென்று நீங்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். தொடர்ந்து, பிரச்சனைகள் வந்ததைத் தொடர்ந்து, வாட்ஸ் அப் நிறுவனம் இத்தகைய, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என அறிவித்துள்ளது.