தற்பொழுது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஒரு விஷயம் என்றால், அது ஒரு வைரஸ் தான்.
வாட்ஸ் ஆப் மூலம், செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் போன்களில் வைரஸ் ஒன்று ஊடுறுவியுள்ளதாக, பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, சுதாரித்துக் கொண்ட இந்திய ஐடி அமைச்சகம், இது குறித்து விசாரணை நடத்தியது.
அதில், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, வாட்ஸ் ஆப் மூலமாக வைரஸ் ஒன்று வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸ் உளவு பார்க்கும் வைரஸ் ஆகும். இதற்கு பெகஸஸ் என்றப் பெயரும் உண்டு.
இதனைப் பற்றி, வாட்ஸ் ஆப் நிறுவனத்தினை நடத்தி வரும், பேஸ்புக் நிறுவனம் விசாரித்து வருகின்றது. இதனிடையே, இந்த வைரஸ் குறித்தும், பயனர்களின் பாதுகாப்பு குறித்தும் வரும் நவம்பர் 4ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு, வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு மத்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வைரஸ், இஸ்ரேல் நாட்டின் பின்புலத்தில் இருந்து செயல்பட்டு வருகின்றது. இது ஒரு ஸ்பைவேர் எனப்படும் வைரஸ் பிரிவினைச் சார்ந்தது. இந்த வைரஸ் சாதாரணமாக வாட்ஸ் ஆப் மூலம், நம்முடையப் போனுக்குள் நுழைய முடியாது. காரணம், நம்முடைய போனும் சரி, வாட்ஸ் ஆப்பும் சரி, மிகவும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை உடையவை.
எனவே, ஒரு சாதாரண வலைதளத்தின் பக்கத்தினைப் போன்ற லிங் மூலம் இது பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் ஒரு முறை போனில் ஏறிவிட்டால் போதும். நாம் பேசும் பேச்சு முதல் எடுக்கும் புகைப்படம் வரை, அனைத்தையும் இயக்கும் சக்தி வாய்ந்தாக உள்ளது. இவ்வளவு ஏன், நாம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட போனினை ஆஃப் செய்து வைத்தாலும், இந்த வைரஸ் அந்த போனினை இயக்கி, நாம் தூங்கும் பொழுது புகைப்படம், வீடியோக்கள் எடுக்கும் அளவிற்கு மிகவும் வலிமையானது.
இந்த வைரஸினைப் பயன்படுத்தி, நாம் பேசுவதை ரெக்கார்ட் செய்யலாம். ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் அனைத்து பாஸ்வேட் மற்றும் கணக்கு வழக்குகள், சாட்டிங் தகவல்கள், வீடியோக்கள் என அனைத்தையும் இயக்க இயலும். ஒருவித எக்ஸ்டர்னல் லிங்கானது, வாட்ஸ் ஆபில் உங்களுக்கு முதலில் அனுப்பப்படும். அந்த லிங்கினை நீங்கள் கிளிக் செய்யும் பொழுது, அந்த லிங்கினைப் பயன்படுத்தி, அந்த வைரஸ் நீங்கள் டவுன்லோட் செய்யாமலேயே டவுன்லோட் ஆகிவிடும்.
இவ்வளவு மிக அதிநவீன வைரஸால், 1400 பேர் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும், அவர்கள் பற்றியத் தகவலை வெளியிட வில்லை. தொடர்ந்து, இது குறித்து விசாரித்து வருவதாக கூறியுள்ளது.