பள்ளிகள் திறப்பு எப்போது? மௌனம் களைத்த மத்திய அரசு!

06 April 2020 அரசியல்
indianstudents.jpg

வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 12ம் வகுப்புத் தேர்வுகளில் ஒரு சிலத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. இதனால், பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக, கல்வியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க். அவர் பேசுகையில், இந்தியாவில் மொத்தம் 34 கோடி மாணவர்கள் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கையானது, அமெரிக்க மக்கள் தொகையினை விட அதிகம். அவர்கள் நம்முடைய மிகப் பெரிய சொத்து.

அவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் புதிய திட்டங்களை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றோம். தற்போதைய சூழ்நிலையில், ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், அதற்கேற்றாற் போல, நடப்புக் கல்வியாண்டினைப் பாதிக்காத வண்ணம் என்ன செய்ய வேண்டும் என யோசித்து வருகின்றோம்.

விரைவில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடுவோம் என்று அவர் கூறினார். இன்னும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில், அந்தத் தேர்வு நடத்தப்பட்டு பின்னர், அதன் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் வெளியிடப்பட வேண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS