ஈக்குவேடாரை விட்டு நித்தியானந்தா வெளியேறிவிட்டார்! அப்போ எங்கே இருக்கின்றார்?

03 January 2020 அரசியல்
nithayanandha21.jpg

தமிழகத்தில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்தத் தேர்தலில் யார் வெற்றிப் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு பெரிதாக நிலவி வருகின்றது. இந்நிலையிலும், நித்தியானந்தாவின் பெயரே டிரெண்டிங்கில் உள்ளது.

கடந்த சில வாரங்களாக, நித்தியானந்தாவின் பெயரே, சமூக வலைதளங்கள் மட்டும் செய்தி சேனல்களிலும் டிரெண்டிங்கில் உள்ளது. அவரும் அதனைப் பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து தன்னுடைய பிரசங்க வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். குஜராத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, குழந்தைகள் கடத்தல் மற்றும் சிறை வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், நித்தியானந்தாவின் மீது வழக்குத் தொடரப்பட்டது. தன்னுடைய மகள்களை மீட்டுத் தருமாறு, ஜனார்த்தன ஷர்மா வழக்குத் தொடர்ந்தார்.

இரண்டு மகள்கள் மீட்கப்பட்ட நிலையில், இரண்டு மகள்களைக் காணவில்லை என, போலீசார் தெரிவித்தனர். நித்தியானந்தாவும் தலைமறைவாகிவிட்டார். அவரை இந்தியா முழுவதும் தேடியப் போலீசார் அவர் கிடைக்காததால், அவரைக் கண்டுபிடிக்க இயலவில்லை என, நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அவரைத் தேடும் நபராக அறிவித்தது நீதிமன்றம். பின்னர், சர்வதேச போலீஸ் எனப்படும், இண்டர்போல் உதவியினையும் தற்பொழுது இந்திய போலீஸ் அதிகாரிகள் நாடியுள்ளனர். இந்நிலையில், ஈக்குவேடார் நாட்டுப் பகுதியில், சொந்தமாக தீவு ஒன்றினை வாங்கிய நித்தியானந்தா அதற்கு கைலாசா என்றப் பெயரினையும் வைத்துள்ளார்.

அதனைத் தனி நாடாக அறிவிக்க வலியுறுத்தி, ஐநாவிற்கு கடிதமும் எழுதி அனுப்பி வைத்துள்ளார். இந்த முயற்சியினால் இந்திய அரசாங்கமே அதிர்ந்து விட்டது. இதனையடுத்து, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க ஈக்குவேடார் நாட்டிடம் இந்தியா கூறியது. ஆனால், அவர் ஈக்குவேடார் நாட்டில் இல்லை என, அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை, மத்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், நித்தியானந்தா ஈக்குவேடார் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், இருப்பினும் அவர் எங்கு இருக்கின்றார் என்றத் தகவல் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார். அவரைப் பற்றித் தகவல் கிடைத்தால் கூறுங்கள் என, வெளிநாட்டு தூதரகங்களிடம் கூறியுள்ளோம் என்றார்.

HOT NEWS