பணத்தை எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் என, அனைவரும் யோசிக்கின்றனர். பணத்தினைப் பெரும்பாலும், கச்சா எண்ணெய், நிலம் அல்லது தங்க நகைகளிலேயே முதலீடு செய்கின்றனர். இதற்கு நீங்கள் ஷேர் மார்க்கெட் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
சாதாரணமாக, நகைகள் வாங்குதல், இடம் வாங்கி சேர்த்தல், வீடு வாங்குதல் போன்றவைகளே முதலீடுகள் ஆகும். தற்பொழுதுள்ள சூழ்நிலையில், வரி விதிப்பின் காரணமாக, பெரிய அளவில் முதலீடுகளை யாரும் செய்வதிலை.
அதனாலயே, தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடிக்குமானால், கண்டிப்பாக, சவரன் ஐம்பதாயிரத்தைத் தொட்டாலும், அது ஆச்சர்யப்படுவதற்கில்லை.
பெரும்பாலான புத்திசாலிகள், பணத்தினை வங்கிகளிலேயே, சேமிப்பாக வைத்துவிடுகின்றனர். இதனால், வட்டியினை லாபமாக பெறுகின்றனர். ஒருவேளைப் பணத்தினை வெளியில் எடுத்து எதையாவது வாங்க முயன்றால், விலைவாசி மற்றும் வரியின் காரணமாக, செலவுகள் அதிகமாகும் என எண்ணி, குறைந்த லாபம் என்றாலும், பரவாயில்லை என எண்ணி, பணத்தினை வங்கிகளிலேயே வைத்துவிடுகின்றனர்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மேற்சொன்ன விஷயங்களில், குறிப்பிடப்பட்டுவிட்டன. இதில் உள்ள மர்மத்தை நீங்கள் கண்டுபிடித்துவிட்டாலே, உங்கள் பணம், உங்கள் கையிலேயே இருக்கும்.