பற்களை வெண்மையாக வைத்துக் கொள்ள, அனைவருக்கும் ஆசை உண்டு. தமிழகத்தில் நாம் பருகும் குடிநீரில் அளவுக்கு அதிகமாக குளோரின் இருப்பதால், நம்முடையப் பற்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடுகின்றது. இது இயற்கையான நிகழ்வு என்றாலும், தொடர்ந்து இது நடைபெறுவதால், நம்முடையப் பற்கள் நிரந்தரமாக மஞ்சள் நிறத்திலேயே, இருந்துவிடுகின்றன. மேலும், நாம் உண்ணும் உணவின் காரணமாகவும் மஞ்சள் நிறம் படிப்படியாகக் கரையாக மாறுகிறது. இதனால், கடைசியில் பற்களை எடுக்கும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய விபரீதத்திலிருந்து தப்பிக்க நாம் பின்வரும் எளிய முறைகளைக் கையாண்டாலேப் போதும். நாம் நம்முடையப் பற்களை மிகப் பொலிவுடனும் உறுதியாகவும் மாற்றலாம்.
இதில் சிறிதளவு உப்பைச் சேர்த்துக் காலையிலும், மாலையிலும், ஈரில் படாமல் பற்களில் மட்டும் படும்படித் தேய்த்து வந்தால், ஒரு வாரத்திற்குள்ளாகவே பற்களில் ஏற்பட்டக் கறைகள் எளிதில் மறையும்.
பேக்கிங் சோடாவில் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து பசையாக்கி, பின்னர் அதைப் பற்களில் தேய்த்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்துவிடும். அதே, சமயம் எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ் அமிலம் பற்களில் உள்ள தேவையற்ற கிருமிகளைக் கொன்றுவிடும்.
சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் கரைகள் அவ்வளவு எளிதில் மறையாது. அதே சமயம், குடிப்பழக்கமும் இருந்தால் அவ்வளவுதான், சொல்லவே வேண்டாம். பற்களில் சீக்கிரமே பள்ளங்கள் ஏற்படும். இதனைத் தடுக்க பற்களில் எலுமிச்சைச் சாற்றுடன் சிறிதளவு ஆலிவ் ஆயிலைக் கலந்து, காலையிலும், மாலையிலும் தேய்த்து வந்தால், பற்களில் ஏற்படும் கறைகள் மட்டுமின்றி பற்சொத்தைகளும் மாறும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில், வாயில் நல்லெண்ணெய்யை ஊற்றி 10 நிமிடங்கள் பற்களில் படும்படி வாய்க்குள்ளேயே வைத்திருக்க வேண்டும். சரியாகப் பத்து நிமிடம் கழித்து, கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து 20 நாட்கள் செய்து வந்தால், பற்களில் உள்ள கரைகள் மறையும்.
பல்லில் வழி ஏற்பட்டால், மிதமான சூட்டில் உள்ள நீரில், சிறிதளவு உப்பைப் போட்டுக் கொப்பளிக்க பல்லில் ஏற்படும் வழி மறையும்.
இவை அனைத்துமே, அனைத்து நாட்டு ஆராய்ச்சியாளர்களாலும் மருத்துவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும்பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளாகும். இதுத் தெரியாமல் பலர், பல் மருத்துவருக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்கின்றனர்.