கொரோனா வைரஸ் இந்த உலகினை விட்டுப் போகாது! WHO அறிவிப்பு!

15 May 2020 அரசியல்
whoonindia.jpg

உலகம் முழுவதும் பரவியிருக்கின்ற கொரோனா வைரஸானது, இந்த உலகில் நிரந்தரமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸானது, சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து கடந்த ஆண்டின் இறுதியில் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் மிகவும் வேகமாகப் பரவியதோடு மட்டுமல்லாமல், மூன்று லட்சம் பேரின் உயிர்களையும் பறித்துள்ளது. இது குறித்து, தினமும் புதிய அறிவிப்புகளை உலக சுகாதார அமைப்பு அறிவித்த வண்ணம் உள்ளது.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த, உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குநரான மைக்கிள் ரியான், புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அவர் பேசுகையில், ஹெச்ஐவி வைரஸ் போல, இந்த கொரோனா வைரஸும் மனித குலத்தினை விட்டுப் போகப் போவது இல்லை. நாம் ஹெச்ஐவி வைரஸினைப் புரிந்து கொண்டோம்.

அதனால், அந்த வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடிகின்றது. அதே போல், இந்த கொரோனா வைரஸில் இருந்து நம்மால் நம்மைப் பாதுகாக்க இயலும். ஊரடங்கினை நீக்குவது பல நாடுகளும் முடிவு செய்துள்ளது. அவைகள் அனைத்தும் கவனமுடன் இருக்க வேண்டும். கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது, எப்படி இருக்கும் என்றுத் தெரியாது. எனவே, உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.

அதுமட்டுமின்றி, சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தன்னார்வல உதவியாளரகள் மீது பலர் வன்முறைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இது முற்றிலும் தவறான செயல். இவை அறிவற்றத்தனமான, முட்டாள்தனமான செயல்கள் எனக் கூறியுள்ளார்.

HOT NEWS