டிரம்புக்கு பதிலடி கொடுத்த உலக சுகாதார மையத் தலைவர்! எப்படித் தெரியுமா?

09 April 2020 அரசியல்
whochief.jpg

உலகளவில் பரவி வருகின்ற கொரோனா வைரஸால், தற்பொழுது வரை 14 லட்சத்திற்கும் அதிகாமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், பெரும் அளவில் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்பினால், உலக வல்லரசான அமெரிக்கா தான் அதிளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டு அதிபர் மீது, பெரிய அளவில் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதனை மாற்றும் பொருட்டு, இந்தியாவிற்கு வேண்டுகோளும், உலக சுகாதார அமைப்பிற்கு எச்சரிக்கையும் விடுத்தார் டிரம்ப்.

அவர் பேசுகையில், கடந்த ஜனவரி மாதம் நான் இந்த வைரஸானது, மனிதர்களிடம் மற்றொரு மனிதருக்குப் பரவும் தன்மையுடையது என்றார். ஆனால், உலக சுகாதார அமைப்பு மறுப்புத் தெரிவித்தது. இந்நிலையில், இந்த வைரஸ் எப்படி பரவுகின்றது என்பதுப் பற்றி நாம் அனைவருமே அறிவோம். இந்த வைரஸ் விஷயத்தில், சீனாவிற்கு சாதகமாக உலக சுகாதார மையம் செயல்படுகின்றது.

இதனால், அந்த அமைப்பிற்கு வழங்கி வருகின்ற நிதியினை நிறுத்தப் போவதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதனிடையே, இவருடையப் பேச்சிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, உலக சுகாதார மையத்தின் தலைவர், டெட்ராஸ் அதனாம் கேப்ரியேஸ் பேசியுள்ளார். ஜெனிவாவில் பேசிய அவர், உலக நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாக, இந்த எதிரியினை எதிர்கொள்ள வேண்டும். அமெரிக்காவும், சீனாவும் ஒன்றாக இணைந்து, இந்த கொரோனா வைரஸை எதிர்கொள்ள வேண்டும்.

உலக நாடுகளில் உள்ள அனைத்துக் கட்சிகளிடமும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், பொதுமக்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக, அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்கள் தோளில் அதிக சவப்பெட்டிகளை தூக்க விரும்பவில்லை என்றால், அனைவரும் ஒற்றுமையாக இருங்கள். இந்த வைரஸில் உங்கள் அரசியலைச் செய்யாதீர்கள் என எச்சரித்துள்ளார்.

நான் கருப்பினத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைக் கொள்கின்றேன். அதற்காக, என் மீது தனிப்பட்ட விமர்சனங்கள் வைத்தாலும் எனக்குக் கவலையில்லை. கருப்பின மக்கள் மீது, மருந்தினைப் பரிசோத்திக்க நான் விடமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS