கொரோனா மருந்து வந்தாலும் பிரச்சனை முடிவிற்கு வராது! WHO அறிவிப்பு!

17 November 2020 அரசியல்
vaccination.jpg

கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்து பயன்பாட்டிற்கு வந்தாலும், உலகளவில் நிலவி வருகின்ற பிரச்சனையானது, அவ்வளவு எளிதில் முடிவிற்கு வராது என, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவிய வண்ணம் உள்ளது. இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், உலகின் பல முன்னணி நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில், கிட்டத்தட்ட 90% என்ற அளவிலான வெற்றியினை, ரஷ்யா, அமெரிக்க நாடுகளின் மருந்துகள் எட்டியுள்ளன. பெரும்பாலான மருந்துகள் அனைத்தும், தற்பொழுது இறுதிக் கட்டப் பரிசோதனையில் இந்த மருந்துகள் உள்ளன. விரைவில், இந்த மருந்துகள் அனைத்தும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், தினமும் கொரோனா வைரஸ் குறித்து தகவல் தெரிவித்து வருகின்ற உலக சுகாதார மையம், புதிய தகவலை அதிரடியாக வெளியிட்டு உள்ளது. நேற்று அதன் தலைவர் டெட்ரோஸ் பேசுகையில், தற்பொழுது உள்ள சூழ்நிலையில், கொரோனா வைரஸிற்கு மருந்து பயன்பாட்டிற்கு வந்தாலும், இந்த வைரஸ் பிரச்சனையானது உடனடியாக முடிவிற்கு வராது. முதலில் இந்த மருந்தானது தரமானதாக இருக்க வேண்டும். அதனைத் தொடர்ந்தே, அதற்கு அனுமதி வழங்கப்படும்.

அத்துடன் அந்த மருந்தானது, முதலில் உயிருக்குப் போராடுபவர்களுக்கும், முதல்நிலைக் களப்பணியாளர்களுக்கும், வயதில் முதியவர்களுக்குமே வழங்கப்படும் எனவும், பின்னர் தான் பொது மக்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். மருந்து பயன்படுத்தப்பட்ட பின்னரும், தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய சூழலில் இருக்கின்றோம் என அறிவித்தும் உள்ளார்.

HOT NEWS