உலகில் நடக்கும் விஷயங்களைப் பலரும், தங்களுடைய அறிவின் மூலம், ஞானத்தின் மூலம் முன்கூட்டியேக் கூறியுள்ளனர். அவர்களில் ஒருவர் தான் இந்த பாபா வங்கா.
பல்கேரியா நாட்டில் 1911ம் ஆண்டு அக்டோர் 3ம் தேதி பிறந்த இவரின் இயற்பெயர் வாங்கிலியா பாண்டீவா குஸ்டரோவா. இவர் வாழும் பொழுது இவரைப் பற்றி யாருக்கும் பெரிய அளவில் தெரியாமல் இருந்தாலும், 1997ம் ஆண்டுக்குப் பிறகு தான் இவர் மிகவும் பிரபலமடைந்தார். குறைப்பிரசவத்தில் பிறந்த இவருக்கு, இயற்கையாகவே உடலில் சத்துக் குறைபாடு இருந்துள்ளது. அப்போதைய வழக்கப்படி, உயிர்பிழைக்காது எனத் தெரிந்த பின், அந்தக் குழந்தைக்குப் பெயர் வைக்கமாட்டார்கள்.
அதனால், இவருக்கும் பெயர் வைக்காமலேயே இருந்துள்ளனர். ஆனால், திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக இந்தக் குழந்தை அழுதுள்ளது. உடனே, அவருடைய தாய், தெருவில் சென்று கொண்டிருந்தவரை அழைத்து, என் குழந்தைக்குப் பெயர் வையுங்கள் எனக் கூறியுள்ளார். அதற்கு அந்த நபர், ஆன்ட்ரோமஹா எனப் பெயரிட்டுள்ளார்.
ஆனால், அதனை வங்காவின் தாய் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது, கிரீக் மொழி. ஆன்ட்ரோமஹா என்றப் பெயரானது, கிரீக் மொழியில் இருந்ததால், அதனை அவருடையத் தாய் சூட்டவில்லை. சிறு வயதில், ப்ரவுன் நிற கண்களுடன், அழகான முடியுடன் இவர் காணப்பட்டு உள்ளார். இந்நிலையில், இளம் வயதில் திடீரென்று தாக்கியத சூறாவளியில் அவர் சிக்கிக் கொண்டார். அப்பொழுது, அவருடைய பார்வையானது பாதிக்கப்பட்டது. அவருடைய செயல்திறனும் முற்றிலும் மாற்றமடைந்துள்ளது.
1925ம் ஆண்டு பள்ளிக்குச் சென்ற வங்கா, மூன்று வருடங்கள் பார்வையற்றோர் பள்ளியில் பயின்றுள்ளார். இவருடைய வளர்ப்புத் தாய் இறந்த உடன், ஏழ்மையின் காரணமாக, தன்னுடைய சொந்த வீட்டிற்கே மீண்டும் வந்துவிட்டார். தன்னுடன் பிறந்தவர்களைப் பார்த்துக் கொள்வதற்காக நேரத்தினை செலவிட்டார். அவரை பரிசோதித்து வந்த மருத்துவர்கள், இவர் விரைவில் இறந்துவிடுவார் எனக் கூறிவிட்டனர்.
1939ம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருந்த இரண்டாம் உலகப் போர் காலக் கட்டத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னுடைய உதவியினை செய்தார். தன்னால், பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற இயலும் எனக் கூறினார். இதனால், அவரைப் பார்க்க பலரும் வர ஆரம்பித்தனர். பின்னர், 1942ம் ஆண்டு, திமித்திர் குஸ்டரோவ் என்பவரை மணந்தார்.
இவருடைய சக்தியினை உணர்ந்த மக்கள், இவரை பின் தொடர ஆரம்பித்தனர். இவர் மீது உள்ள மரியாதை மட்டும் பக்தியின் காரணமாக பணம் குவியத் துவங்கியது. அந்தப் பணத்தினை வைத்து, புதிய சர்ச் ஒன்றினை கட்டியுள்ளார். 1996ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி அன்று, இயற்கை எய்தினார். இவருடையப் பெரும்பாலான கணிப்புகள் தற்பொழுது வரை பலித்துள்ளன.
ஏற்கனவே, அமெரிக்காவில் நடைபெற்ற 9/11 தாக்குதல், அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக கருப்பர் இன மக்கள் தேர்ந்தெடுக்கப்படுவார், 2000ம் ஆண்டு ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பலில் பிரச்சனை எனப் பலவற்றைக் கணித்துக் கூறியுள்ளார்.