உலகளவில் பேசப்படும் மோசமான நபர்களில் ஒருவர் தான் இந்த ப்ளடி மேரி. இவருடையப் பெயரில் இருந்தே, இவர் எவ்வளவு பெரிய இரத்த வெறி பிடித்தவர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவருடைய வாழ்க்கையைப் பலரும் படமாக்கி இருக்கின்றனர். இது பொய்யான கதை என்று, பலர் நினைக்கின்றனர். உண்மையில், இது பொய்யான கதை அல்ல. இவர் வரலாற்றில் உள்ள கருப்பு புள்ளிகளில் ஒருவர் ஆவார்.
இங்கிலாந்தினை மையமாகக் கொண்டது தான் இந்த பிளடி மேரியின் கதை. அங்கு தற்பொழுது வரை இவர் பயத்தினை உருவாக்குபவராக இருக்கின்றார். தமிழில் யாமிருக்க பயமேன் என்ற படம் உள்ளது. அதில், கண்ணாடியினைப் பார்த்து, வாடா வாடா பண்ணீ மூஞ்சி வாயா என அழைத்தால், பேய் வந்து கொன்றுவிடும் என ஒரு காட்சி இருக்கும். அது இவரை வைத்துத் தான் உருவாக்கப்பட்டது.
திருமணமாகாத பெண்கள், இவரை அழைப்பர். அவர்கள் அழைக்கும் பொழுது தான், இந்த ப்ளடி மேரி காட்சித் தருவாள். குழுவாக பெண்கள் ஒரு விளையாட்டினை விளையாட வேண்டும். அப்பொழுது, ஒரு கையில் ஒரு மெழுவர்த்தி மற்றும் மற்றொரு கையில் முகம் பார்க்கும் கண்ணாடியினை எடுத்துக் கொண்டு, விளையாடுபவர்களில் ஒரு பெண் மாலை நேரத்தில் தன் தோழிகளை, இரவு நேரத்தில் தேடி விளையாட வேண்டும்.
அப்பொழுது தான், அந்த ப்ளடி மேரியினைப் பார்க்க இயலும். இந்தப் ப்ளடி மேரி என்பவள், அந்த மெழுகுவர்த்தி ஏந்தியப் பெண்ணின் வருங்கால கணவரின் முகத்தினைக் கண்ணாடியில் காட்டுவாள். அதற்காகப் பலப் பெண்களும் இந்த விளையாட்டினை விளையாடினர். மூன்று முறை, இருட்டான அறைக்குள் நின்று கொண்டு, ப்ளடி மேரி வா, ப்ளடி மேரி வா, ப்ளடி மேரி வா எனக் கண்ணாடியினைப் பார்த்துக் கூற வேண்டும். அல்லது 13 முறைப் பார்த்துக் கூற வேண்டும்.
அவ்வாறு கூறும் பொழுது, வருங்கால கணவரின் முகமானது அந்தக் கண்ணாடியில் தெரியும். ஒரு சில சமயம், அதில் வருங்காலக் கணவருக்குப் பதில், மண்டை ஓடுகள் தெரியுமாம். அதற்கு அர்த்தம், அந்தப் பெண் திருமணத்திற்கு முன்பாகவே இறந்துவிடுவார் என்பதாம். இந்தப் ப்ளடி மேரியினை அழைத்தப் பலரையும், ப்ளடி மேரி சும்மா விடவில்லை. ஒரு சிலருடைய கண்களை கிழித்துள்ளார். ஒரு சிலரை கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
தற்பொழுது வரை, இந்தப் பெயருக்குள்ள மதிப்பு என்பதேத் தனி தான். அந்த அளவிற்கு இந்த ப்ளடி மேரியினைப் பலரும் அழைத்து விளையாடி உள்ளனர். உண்மையில் யார் இந்தப் ப்ளடி மேரி என யாருக்கும் தெரியாது. இந்தப் பெண், முதலாம் உலகப் போர் சமயத்தில், அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் வாழ்ந்த ப்ளாக் மேஜிக் செய்யும் சூனியக்காரி தான் இந்த, ப்ளடி மேரி என கூறப்படுகின்றார்.
இந்தப் பெண், ரோட்டில் அனாதையாக இருப்பவர்களை வசியம் செய்து, அவர்களை தன்னுடையக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் எனவும், அவர்களைப் பலி கொடுத்து தன்னுடைய சக்திகளை வளர்த்துக் கொண்டார் எனவும் கூறப்படுகின்றது.