இரண்டு கொலையாளிகளை ஒழித்த இந்தியா தான் வழி நடத்த வேண்டும்! WHO வலியுறுத்தல்!

26 March 2020 அரசியல்
whoonindia.jpg

தற்பொழுது உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், இது குறித்து உலக சுகாதார நிறுவனம் தற்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளது.

டாக்டர். மைக்கிள் ஜே ரியன் பேசுகையில், தட்டம்மை, பெரியம்மை போன்ற பெரிய பெரிய நோய்களை இந்திய அரசாங்கம், வெற்றிகரமாகக் கையாண்டு பொதுமக்களை காப்பாற்றியுள்ளது. சீனாவினைப் போல, இந்தியாவும் மிகப் பெரிய மக்கள் தொகைக் கொண்ட நாடு. தற்பொழுது பரவி வரும் இந்த வைரஸானது, பெரிய நாடுகளில் ஏற்படும் தாக்கத்தைப் பொறுத்தே, அதன் மீதான விமர்சனமும், கவனமும் உண்டாகும்.

எனவே பொது சுகாதார மட்டத்திலும், சமூகத்தின் மட்டத்திலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க இந்தியா முன்வருவது மிகவும் முக்கியமானது. இரண்டு கொலையாளிகள் (தட்டம்மை, பெரியம்மை) ஒழிப்பதில் இந்தியா வழி வகுத்தது. பெரியம்மை ஒழிப்பு, மனிதகுலத்தின் மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்றாகும். எல்லாப் போர்களைக் காட்டிலும், இந்த வைரஸ் தான் மிகக் கொடூரமானது.

ஏற்கனவே, முக்கிய நடவடிக்கைகளை எடுத்த இந்தியா, இந்த நோயினை வெகுவாகப் பரவாமல் கட்டுப்படுத்தி உள்ளது. இந்தியா தான், போலியோ என்ற மற்றொரு அமைதியான கொலையாளியையும் நீக்கியது. பொதுமக்களைக் கண்காணிப்பது, மருத்துவம் செய்வது மற்றும் தடுப்பூசி போடுவது என அனைத்தையும் சிறப்பாக செய்தது. இதிலிருந்தே இந்தியாவின் முயற்சியினை நாம் அறிய இயலும்.

இந்தியாவினைப் போன்று, பிற நாடுகளும் பொதுமக்களை வழிநடத்த வேண்டும். என்ன செய்ய முடியும் எனவும், எப்படி செய்ய வேண்டும் எனவும் கூற வேண்டும்.

HOT NEWS